ரமணா படம் மாதிரியே.. அதிகாலையில் காலமான மூதாட்டி! 10.30 மணி வரை ட்ரீட்மெண்ட்? ஹாஸ்பிடலுக்கு ஃபைன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிரபலமான விஜயா மருத்துவமனைக்கு 65 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் அபாரதம் விதித்து செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிகாலை 2 மணிக்கு காலமான பெண்ணுக்கு காலை 10:30 மணி வரை உணவு வழங்கியதாகவும், பராமரிப்பு செய்ததாகவும் கட்டணமாக 5750 கூடுதலாக வசூல் செய்ததாக அப்பெண்ணின் மகன் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரமணா திரைப்படத்தை பெரும்பாலும் அனைவரும் பார்த்திருப்போம்.. அந்த திரைப்படத்தில் ஹீரோ விஜயகாந்த் அரசு மருத்துவமனையில் இறந்து போன ஒரு உடலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவரை காப்பாற்ற வேண்டும் என சொல்வார்.

Vijaya Hospital Fined

உடனே மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளிப்பது போல பாவ்லா செய்து பல லட்சம் ரூபாயை ஏமாற்றி விடுவார்கள். பின்பு அந்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது போல காட்சி வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இறந்து போன ஒரு பெண்ணுக்கு உணவு வழங்கியதாகவும் அவரை பராமரித்ததாக கூறி கட்டண வசூலித்து சிக்கலில் சிக்கியிருக்கிறது பிரபலமான விஜயா மருத்துவமனை. சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது தாயார் சுசிலா கடந்த 5.2.2003 அன்று கோமாவில் இருந்துள்ளார். இதனையடுத்து தன் தாயை சென்னை வடபழனியில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் கோபாலகிருஷ்ணன்.

சிகிச்சை பெற்று வந்த சுசிலா அடுத்த நான்கு நாட்களில் சிகிச்சை பல நன்றி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி காலை 2:30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காலை 10:30 மணி வரை சுசிலாவின் உடலை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் இருந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு இறந்த சுசிலாவிற்கு காலை 10:30 மணி வரை உணவு வழங்கியதாகவும் பராமரிப்பு செய்ததாகவும் கட்டணமாக 5750 கூடுதலாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மருத்துவமனை தரப்பில் கூடுதலாக 61 ஆயிரத்து 644 ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் அந்த பணத்தை வழங்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் வடபழனி செயல்பட்டு வரும் விஜயா மருத்துவமனைக்கு ரூபாய் 65 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தும், மேலும் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டிய கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூபாய் 61 ஆயிரத்து 644 வழங்கிட வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+