சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ்'.. ஒரு சிறந்த 'மீம் கியேட்டர்' ஐ இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டோமே.. செம்ம!

Google Oneindia Tamil News

சென்னை : விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் பக்ரீத் பண்டிகை தொடர்பாக வெளியிட்டிருக்கும் மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாய்ஸ் படத்தில் சாமியார் வேடத்தில் வரும் செந்தில் படத்தை வைத்து மீம் அனுப்பி உள்ளார். இதை வெகுவாக ரசித்த நெட்டிசன்கள் அவருக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அன்பையும் தியாகத்தையும் வெளிக்காட்டும் விழா பக்ரீத். இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் பக்ரீத் திருநாளும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார் தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலிஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி

பலி தருதல் என்ற இஸ்லாமிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் இன்று அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து கொடுத்து இஸ்லாமியர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.

பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் வாழ்த்து

உலகம் முழுக்க இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களால் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் நாளையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் பகிர்ந்து அளிக்கும் பண்பை போதிக்கும் நாள் என்பதால் உணவையும், பொருளையும் இந்த தினத்தில் பகிர்ந்து அளித்தார்கள்.

மீம்ஸ் வாழ்த்து

மீம்ஸ் வாழ்த்து

இந்நிலையில் உலகில் பலரும் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னார்கள். மாநில மனித உரிமைகள் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன் சொன்ன வாழ்த்து பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மீம்ஸ் வடிவில் வாழ்த்தை பகிர்ந்துள்ளார். பிரியாணி, சாப்பாடு எங்கு கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்ற டைம் டேபிள் என்னிடம் இருக்கிறது என்று பாய்ஸ் படத்தில் செந்தில் கூறுவார். அந்த படத்தை தூக்குச்சட்டியுடன் பகிர்ந்து இருந்தார்.

மீம் கிரியேட்டர்

மீம் கிரியேட்டர்

இந்த செந்தில மீம் வைரலான உடன் பலரும் மாநில மனித உரிமை செயலாளரும், முன்னாள் திருப்பூர் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயனை பாராட்டினார்கள். ஒருவர் தனது பதிவில், உங்களுக்குள்ள இருக்கிற மீம் கிரியேட்டரை தட்டி எழுப்பிவிட்டோம் என்று பாராட்டினார்கள். அதற்கு விஜயகார்த்திகேயன் ஐஏஏஸ் பாட்ஷா படத்தில் ஒரு காட்சியை வைத்து மிரள வைத்தார்.

பலரும் வாழ்த்து

பலரும் வாழ்த்து

அவருக்கு பலரும் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர் புன்னகையுடன் பதில் அளித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ், கொரோனா காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாராட்டை பெற்றார். இப்போது மீம் கிரியேட்டராக மாறி அசத்தி உள்ளார்.

English summary
'Vijayakarthikeyan IAS' meme posted on Bakreed festival is going viral on social media. Senthil, who plays the role of a priest in the movie Boys, has sent a meme with the picture. Netizens who enjoyed this greatly wishes vijayakarthikeyan ias on Bakrid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X