Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் உதவியாளர் மகனுக்கு மா.செ பதவி.. புஸ்சி ஆனந்திடம் வந்து விழுந்த கேள்வி.. சொன்ன பதிலை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதில், விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் பற்றி பேசிவிட்டு தன் உதவியாளரின் மகனுக்கு பொறுப்பு வழங்கியதற்கு விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், செயதியாளர்களுக்கு பேட்டி அளித்த புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டு 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Vijay TVK Pussy Anand

எனவே மீதம் இருக்கும் 25 மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நிர்வாகிகளுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

உதவியாளர் மகனுக்கு பதவி

அதன்பிறகு இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், இன்று 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், குறிப்பாக சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளராக ஆர். சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டார். இவர் விஜய்யின் முன்னாள் கார் டிரைவரும், தற்போதைய உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் ஆவார். சுமார் 35 ஆண்டுகளாகவே ராஜேந்திரன் விஜய் உடன் இருந்து வருகிறார். கட்சியில் உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி என்று கூறி வந்த நிலையில், விஜய் தன் உதவியாளருக்கே பதவி வழங்கியதை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

வாரிசு அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு உதவியாளரின் மகனை கட்சி பொறுப்பில் அறிவிக்கலாமா? என சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், செயதியாளர்களுக்கு பேட்டி அளித்த புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது:-

புஸ்சி ஆனந்த் பதில்

எல்லாரும் ஒரே ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.. எல்லாருக்கும் என்னன்னா, எப்படி பதவி போட்டால் எப்படியாவது சலசலப்பு உண்டாகும் என்று எதிர்பார்த்தது. ஆனால் யாரு உழைக்கிறார்களோ.. அவர்களுக்கு பதவி அறிவித்து இருக்கிறார் விஜய்.. இதனால் எந்த ஒரு சலசலப்புக்கும் வழியில்லை. ஒன்னு இரண்டு அப்படி வேண்டுமென்றே யாராவது எதாவது சொல்லி அதில் சலசலப்பை உண்டுபண்ண வேண்டும் என்று நினைக்கிறாங்க. அது தமிழக வெற்றிக் கழகத்தில் நடக்காது.

தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை எங்க தலைவர் என்ன சொல்கிறாரோ அது மட்டும் தான். அவர் சொல்லிவிட்டால் எங்கள் கழகத்தினர் அப்படியே பின்பற்றுவார்கள். மொத்தம் 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 6 பேர் நியமனம் இருக்கிறது. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பல வருஷமாக உழைத்து இருக்கிறார்

அப்போது, தவெக சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் முன்னாள் உதவியாளரும், தற்போதைய உதவியாளருமான ராஜாந்திரனின் மகன் சபரிநாதனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு புஸ்சி ஆனந்த் பதில் அளித்து கூறியதாவது:- அவருடைய அப்பா விஜய் கூடவே 35 வருஷமாக வொர்க் பண்ணியிருக்கிறார். இதில் அவருடைய மகனை பார்த்தீர்கள் என்றால், அவரும் சிறு வயதில் இருந்தே விஜய் நற்பணி மன்றத்தில் இருக்கிறார். சிறு வயதில் இருந்தே அதில் இருந்து வந்திருக்கிறாரே தவிர, புதுசா ஒருவருக்கு கொடுக்கல.. அவரும் பல வருஷமாக உழைத்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+