தவெக அதிமுகவின் மறைமுக சொம்பு.. மோடியிடம் மட்டையாக மடங்கி விட்ட விஜய்! விளாசித் தள்ளிய பிரபலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தமிழக வெற்றி கழகம் இடையே தான் போட்டி என கூறிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு விமர்சித்து பேசினார். இந்த நிலையில் ஸ்டாலினின் பெயரை பேசும் போது கடுமையாக விமர்சித்த விஜய் மோடியின் பெயரை உபயோகிக்கும்போது மட்டும் மட்டும் ஏதாவது பார்த்து செய்யுங்க ஜி என மட்டையாக மடங்கி விட்டதாக விமர்சித்துள்ளார் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இன்று கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீராமச்சந்திரா ஹாலில் நடைபெற்றது. இதில் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஜயின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகர், தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

actor vijay Blue Sattai Maran tvk

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் முதல் முறையாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். மேலும் திமுகவின் சீக்ரெட் ஓனர் பாஜக என்றும், உங்கள் பெயரை சொல்வதற்கு எங்களுக்கு என்ன பயம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் திமுகவை விமர்சிக்கும் போது ஆவேசமாக பேசிய விஜய் பாஜகவை பேசும்போது மட்டையாக மடங்கி விட்டார் என விமர்சித்திருக்கிறார் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.

தவெக விஜய்: இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"ஒரு அரசியல் தலைவரின் பெயரை இன்னொரு அரசியல் தலைவர் குறிப்பிடுவது சர்வ சாதாரண விசயம். ஆனால் அதை ஒரு உலக சாதனை ரேஞ்சுக்கு இன்று தவெக பொதுக்குழுவில் தற்பெருமையாக பேசினார் விஜய். கட்சி தலைவர்களின் பெயரை சொல்லவே ஒருவருடம் ஆகிவிட்டது இவருக்கு. இது கூட பலர் விமர்சித்ததன் விளைவாக பேசியதுதான். இல்லாவிட்டால் தமிழக அரசு, ஒன்றிய‌ அரசு என்றுதான் ஈயம் பூசிக்கொண்டு இருந்திருப்பார்.

actor vijay Blue Sattai Maran tvk

முக ஸ்டாலின்: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே எனக்கூறி காரசாரமாக பேசினார். 'அடுத்து பிரதமர் மோடிஜி அவர்களே‌' என்றதும் பாஜக அரசை வெளுத்து வாங்கப்போகிறார் என நினைத்தால். 'தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க ஜி' எனக்கூறி மட்டையாக மடங்கி விட்டார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய்.

பிரதமர் மோடி: அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால்.. தைரியத்தை பாராட்டி இருக்கலாம். ஆனால் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி.. மோடி சார்.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க சார் என மண்டி போட்டுள்ளார் விஜய்.

அமித் ஷா: நமது மாநில உரிமையை வீராப்பாக கேட்க வேண்டும் விஜய். பாத்து செய்யுங்க என பூனை போல கெஞ்சுவது ஏன்? விஸ்வகுரு மோடி, இரும்பு மனிதர் அமித் ஷா என வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க கூடாது என சவுண்ட் விட்டிருந்தால்.. நீங்கள் மானத்தமிழன். அப்படி செய்யாததால்தான் சொல்கிறோம் உங்களை. B டீம் என்று.

actor vijay Blue Sattai Maran tvk

கருவாட்டு சம்பார்: பாஜகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் மேடைகளில் கூவி..நாடகம் ஆடினாலும்.. நீங்கள் B டீம்தான். திமுக, விசிக வாக்குகளை பிரிக்க பெரியார், அம்பேத்கர் முகமூடிகளை அணிந்து வந்தாலும்.‌‌. பருப்பு வேகாது. வரும் தேர்தலில்..வாக்குகளை பிரிக்கும் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு.. பழையபடி சினிமாவில் நடிக்க கிளம்புங்கள். அதுதானே உங்கள் திட்டம்? பிறகு எதற்கு இங்கே வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் கருவாட்டு சாம்பார் அரசியல் செய்து காமடி செய்கிறீர்கள்?

திமுக: திமுகவிற்கு எதிராக பொங்கும்போது‌மட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய்.. அதிமுகவை பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத..ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார். கேட்டால்.. ஆளுங்கட்சியை எதிர்ப்பது தான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு. நாட்டை ஆளும் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து.. அறுத்து தள்ளிட்ட மாதிரி. ஆளும் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரி. ஆனால் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டு 50 ஆண்டுகளா ஆகிவிட்டது?

ஜெயலலிதா: 2021 வரை.‌ 10 வருடங்களாக அவர்களின் ஆட்சிதானே? ஊழல், லஞ்சம் பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள்..A1 என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பறறி பேசாமல் பம்முவது ஏன்? எடப்பாடி ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? ஜெ.வை விமர்சித்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது எனும் பீதியா? தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அமைதியா?

அதிமுக சொம்பு: ஒரு சாமானிய மனிதரை கேட்டால் கூட.. திமுகவும், அதிமுகவும் எங்களை ஆண்டது‌போதும். புதிதாய் வரும் நேர்மையான தலைவரின் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு அளிப்போம் என ஒவ்வொரு முறையும் கூறுவதுண்டு. ஆனால் நீங்கள் அந்த சாமானியருக்கு உள்ள புரிதல் கூட இல்லாமல்.. திமுகவை மட்டும் கடித்து வைத்து.‌ அதிமுகவின் மறைமுக சொம்பு போல செயல்படுவது.. முதுகெலும்பற்ற செயல்‌.. உங்கள் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது." என கூறியுள்ளார்.

என்ன பேசினார் விஜய்?: தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தவெகவின் அரசியல். தவெக நிகழ்ச்சியை நடத்திவிடக் கூடாது என்று ஏராளமான தடைகள் உருவாக்கப்படுகின்றன. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. பெயரில் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது.. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது. மாண்புமிகு மோடி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. உங்கள் பெயரை உச்சரிப்பதில் எனக்கு என்ன பயம்?.. ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக." என விஜய் தனது கட்சியின் முதல் பொதுக் குழுவில் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+