Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மங்களகரமா ‘விக்ரம்’ படத்துல! ஆல்வேய்ஸ் நன்றிகள் ஆண்டவரே! வீடியோ வெளியிட்ட ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தமைக்காக நன்றி தெரிவித்து பிரபல யூடியூப் 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

    Vikram படத்தில் நடிக்க வாய்ப்பு... Kamal-க்கு நன்றி சொன்ன வில்லேஜ் குக்கிங் சேனல்! #Trending

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'.

    கடந்த 3ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் சூர்யா இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    விக்ரம் திரைப்படம்

    விக்ரம் திரைப்படம்

    நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக பெரிய எதிர்பார்ப்புகளிடையே திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ரசிகர்கள் வரவேற்பு

    ரசிகர்கள் வரவேற்பு

    சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு கமலஹாசன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் என்பதாலும் கைதி, மாஸ்டர், படங்களின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றேகூறலாம். விஜய் சேதுபதி, பகத் பாசில், குறைந்த நேரமே வந்தாலும் சூர்யா ஆகியோரின் அபார நடிப்பு பாராட்டு பெற்றுள்ள நிலையில் படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    வில்லேஜ் குக்கிங் சேனல் குழு

    வில்லேஜ் குக்கிங் சேனல் குழு

    இந்நிலையில் படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மங்களகரமாக ஆரம்பிக்கிறோம் என்று யூடியூப் சேனல் மூலம் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த படத்தில் சமையல் செய்யும் காட்சி நடைபெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினருக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.

    லோகேசுக்கு நன்றி

    லோகேசுக்கு நன்றி

    இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசன் ஆகியோருக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதில் நடிகர் கமலஹாசனுக்கு நன்றி எங்கள் குழுவினருக்கு வாய்ப்பளித்த லோகேஷ் மேலும் வளர வேண்டும் அவர் ஆசைப்பட்டது போல் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என வாழ்த்துக்கள் என அந்தப் படத்தின் அடுத்த வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+