சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்கு வேணாம்! பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு! கிராமசபையில் 200 பேர் தீர்மான கையெழுத்து!

Google Oneindia Tamil News

சென்னை : 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி கையொப்பமிட்டனர்.

Recommended Video

    எங்களுக்கு வேணாம்! பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு! கிராமசபையில் 200 பேர் தீர்மான கையெழுத்து!

    தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.

    திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து

     பரந்தூர் விமான நிலையம்

    பரந்தூர் விமான நிலையம்

    இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர்.

    ஏகனாபுரம் மக்கள்

    ஏகனாபுரம் மக்கள்

    இந்தகாரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு , தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

    கிராம சபையில் தீர்மானம்

    கிராம சபையில் தீர்மானம்

    இந்நிலையில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து அதற்கென தீர்மான புத்தகத்தில் கையொப்பமிட்டு அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    English summary
    More than 200 villagers protest against the construction of a new international airport at Parantur ; பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரு மனதாக தீர்மானம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X