பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு.. உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு.. கே.எஸ்.அழகிரி!
சென்னை: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றமானது 2022ம் ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் இருப்பதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவின் நிலை
இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை சுமாா் 66.2 கோடி இருப்பதாகவும், அவா்களின் பொருளாதாரப் பங்களிப்பும், வாய்ப்புகள் அளிக்கப்படுவதும் 2021-ஆம் ஆண்டு முதல் சிறந்த மாற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசியலில் பெண்கள் எம்.பி., எம்எல்ஏ-க்களாகவும், மூத்த அதிகாரிகளாகவும், மேலாளராகவும் இருப்பது 14.6 சதவிகிதத்தில் இருந்து 17.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.

கே.எஸ்.அழகிரி ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135வது இடம் வகிப்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவோடு ஒப்பீடு
2023ம் ஆண்டுக்குள் 30 சதவிகித ஜிடிபி இலக்கை எட்டும் நோக்கில் சீனா பணியாற்றிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி பெற வேண்டிய பகுதியைக் கண்டறிந்து குறியீடுகளை வரையறுத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதே, பொருளாதார இலக்கை அடைவதற்கான வழி. அதைவிட்டு, போகிற போக்கில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என்று மோடி அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் மோசடி செயலாகும்.
Recommended Video

பாஜக மீது விமர்சனம்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று பேசும் ஆர்எஸ்எஸ் வழி வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, பாலின சமத்துவத்தில் 135வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications