சென்னையில் வீடுகளை விற்பனை செய்து.. அரசு வங்கிக்கே அல்வா கொடுத்த விஐபிக்கள்.. அதிரடியாக கைது
சென்னை: சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் ரூ.60 லட்சம் வீட்டு கடன் பெற்றனர். அவர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து, போலியான ஆவணங்களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்து செய்திருந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ரூ.6 கோடி சொத்து அபகரிப்பு வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நில அபகரிப்பு மோசடிகள், கடன் வாங்கி மோசடி செய்வது அதிகமாக நடக்கிறது. அப்படி மோசடியில்ஈடுபட்டவர்கள் அடுத்ததடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி கைது செய்யப்பவர்களின் விவரங்களை பார்ப்போம். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஈக்காட்டுத்தாங்கல் கிளை மேலாளர் சுகன்யா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் ரூ.60 லட்சம் வீட்டு கடன் பெற்றனர். அவர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து, போலியான ஆவணங்களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்துவிட்டார்கள். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான வண்டலூரை சேர்ந்த தேர் விஜயன் (63) என்பவவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 8ம் தேதி அன்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் பள்ளிக்கரணை பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவரையும், அவரது கூட்டாளியான காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (42) என்பவரும் கைது செய்தனர்.
இதேபோல் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சைதாப்பேட்டையை சேர்ந்த தினில்குமார் என்பவரை போலீசார் 12 ஆண்டுகள் கழித்து கைது செய்துள்னர். இதே போல வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ.65 லட்சத்தை மோசடி செய்ததாக கோடம்பாக்கத்தை சேர்ந்த நகோமி என்ற பெண் தொழில் அதிபரும் கைதாகி உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் ஜானகி ராமன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் பெயரில் சென்னையில் உள்ள வங்கி கணக்கில் இருந்து ரூ.4.36 கோடியை அபகரித்துவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகேஸ்வரன், ஆறுமுக குமார் ஆகியோர் கைதாகினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஷியாமளா என்ற பெண் நேற்று கைதாகி உள்ளார். இந்த வழக்கில் வங்கி அதிகாரி மஞ்சுளா என்பவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications