Meme: எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் சண்டையை சமாதானம் செய்ய எம்ஜிஆர் மாளிகை வந்த டொனால்ட் டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவரையும் எடப்பாடி பழனிசாமியையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமாதானம் செய்து வைத்துவிட்டு நோபல் பரிசு கேட்பது போன்ற மீம் வைரலாகி வருகிறது.

Donald Trump

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது அதிமுக இரண்டாக பிரிந்தது. அதில் ஒரு அணி சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணியானது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இந்த நிலையில் நாளடைவில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன.

அப்போது ஓபிஎஸ்ஸையும் எடப்பாடி பழனிசாமியையும் அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் கை குலுக்கி சேர்த்து வைத்தார். இது வைரலானது. இந்த நிலையில் ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் பூகம்பம் எழுந்து, பின்னர் சரியானது. இந்த நிலையில் தற்போது புதிய வெடி வெடித்துள்ளது. அதாவது வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கையை செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

இதையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று, செங்கோட்டையன் பேசினார். இதனால் அவர் அடுத்த நாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 குற்றவாளி என விமர்சித்திருந்தார். தான் 53 ஆண்டு காலமாக அதிமுகவில் இருப்பதாகவே தற்போது அதிமுகவிலேயே தொடர விரும்புவதால் தனது நீக்கம் குறித்து வழக்கு தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் குறித்து இணையவாசிகள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள். அதில் கவனம் ஈர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரின் கைகளையும் குலுக்கி சேர்த்து வைப்பது போன்று ஒரு மீம் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே உக்ரைன்- ரஷ்யா, காசா போர் உள்ளிட்டவைகளை தான் பேசி முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறும் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு கொடுக்க வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+