விடிகாலையில்.. நீலாங்கரையில்.. நீ நிப்பாட்டுடா.. போதை இளைஞரின் அடாவடி.. திணறிய போலீஸ்!
குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "நீ நிப்பாட்டுடா.. நிப்பாட்டுடா..." என்று போதை இளைஞர் சுற்றி நின்ற போலீஸ்காரர்களை பார்த்து தள்ளாடி கொண்டே திட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த வாரம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 4 இளைஞர்கள் திருநங்கைகளிடம் இரவு நேரத்தில் பேசி கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் இருந்ததால், அங்கிருந்த போலீஸ்காரர் அவர்களை கிளம்பி போக சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அவரிடமிருந்த லத்தியை வாங்கி தாக்கினர்.
இது வீடியோவாகவும் வெளிவந்து வைரலானது. ஆனால் நம் போலீசார் விட்டுவிடுவார்களா என்ன.. 4 பேரையும் அப்பவே தூக்கி கொண்டு போய் ஜெயிலில் வைத்துவிட்டனர். குண்டர் சட்டமும் இப்போது இளைஞர்கள் மீது பாய்ந்துள்ளது.

ரெட் கலர் கார்
இப்படித்தான் இன்று விடிகாலை நீலாங்கரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இசிஆர் சாலையில், இன்று அதிகாலை 2.30 மணி இருக்கும். ஒரு ரெட் கலர் கார் வேகமாக வந்தது. வரும்போதே தாறுமாறாகத்தான் வந்தது. அதே வேகத்தில், ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதியது.

உயிர் தப்பினார்
இதில் ஆட்டோ அப்பளம் ஆனது. கட்டுப்பாடின்றி வந்த கார், அங்கிருந்த சுவர் மீது மோதி கடைசியில் நின்றது. இதில், ஆட்டோவுக்குள் இருந்த டிரைவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

தகராறு
இதனை பார்த்த பணியில் இருந்த போலீசார் பதறியடித்து ஓடிவந்தனர். காருக்குள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளைஞர்கள் போதையில் இருந்துள்ளனர். அவர்கள் யார் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஒருவர் மட்டும் காரை விட்டு இறங்கி வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார்.

வீடியோ வைரல்
இளைஞரின் வாயில் அசிங்க அசிங்கமாக வந்தது.. ஒரு இடத்தில் அந்த இளைஞரால் நிற்க முடியவில்லை. தள்ளாடி கொண்டே பணியில் இருந்த போலீஸ்காரர்களை திட்டி கொண்டே இருந்தார். சில போலீசாரை கையால் பிடித்து தள்ளி விட்டார்.

நவீன்
கடைசியில் அந்த நபரை கைது செய்த நீலாங்கரை போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது பெயர் நவீன் என்பதும் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி என்பதும் தெரியவந்தது. நவீன் நல்ல போதையில் இருந்ததால், ஒருமணி நேரம் போராடிதான் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்தியதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாரும், போலீசாரை தகாத வர்ர்த்தைகளால் திட்டியதற்காக நீலாங்கரை போலீசாரும் நவீன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த காட்சிதான் வீடியோவாக இப்போது வெளிவந்துள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications