சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவப்பு ரோஜாவும் கருப்பு யானையும்.. வர்தாவை போல கஜாவும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.. எச்சரிக்கை!

கஜா புயல் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலை போலவே பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயல் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலை போலவே பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கஜா என்பது கருப்பு நிற யானையை குறிக்கும் வார்த்தையாகும். இது தாய்லாந்து வைத்த பெயர். மாறாக வர்தா என்பது சிவப்பு ரோஜாவை குறிக்கும் வார்த்தையாகும். இது பாகிஸ்தான் வைத்த பெயர்.

இந்த கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் வரும் 14ம் தேதி மாலையில் இருந்து 16ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

[கஜா வராண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்! ]

எங்கு கரைய கடக்கும்

எங்கு கரைய கடக்கும்

இந்த புயல் சென்னையை தாண்டி செல்ல இருக்கிறது. சென்னையை தாண்டி நெல்லூர் அருகே 1050 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்த புயல் சென்னையை தாக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

என்ன வேகம்

என்ன வேகம்

தற்போது இந்த புயல் 15 கிலோ மேட்டர் வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால் கொஞ்சமா கொஞ்சமாக வேகம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையை தாண்டும் போது இந்த புயல் 110 கிலோ மீட்டர் வேகம் வரை இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வர்தா புயல்

வர்தா புயல்

இந்த நிலையில் இதுகுறித்து இன்னொரு முக்கிய கணிப்பும் கூறப்பட்டு உள்ளது. இந்த புயல் சென்னையை 2016ல் தாக்கிய வர்தா புயல் போல இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புயலில் குணாதிசியங்கள் இதற்கு இருப்பதாகவும், சென்னையை கடக்கும் சமயத்தில் அதேபோல் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் வேகம் காரணமாக வர்தா போல இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வர்தா நியாபகம் இருக்கிறதா?

வர்தா நியாபகம் இருக்கிறதா?

அதி தீவிர வர்தா புயலானது வடக்கு இந்தியப் பெருங்கடலின் மேலாக உருவானது. 2016ல் டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்த இப்புயலானது பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தின் வடமாநிலங்கள் பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது. சென்னையில் இந்த புயல் 3 கட்டமாக தாக்கியது. இதனால் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது

அச்சம் தேவையில்லை

அச்சம் தேவையில்லை

அதே சமயம் இந்த கஜா புயல் காரணமாக அச்சப்பட தேவையில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனென்றால் இந்த புயல் இன்னும் அதிதீவிர புயலாக மாறவில்லை. அதனால், இது எந்த அளவிற்கு வேகம் அடையும், இல்லை வேகம் குறையுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். அதனால் இப்போது இதைப்பற்றி அச்சப்பட வேண்டியதில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
WARNING: Gaja Storm may affect TN like 2016 Vardha Storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X