எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட வேட்பாளர் தயாராக இருக்கிறார் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டுக்காக தாங்கள் காத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் தரப்பிலும் வேட்பாளர் தயாராக இருப்பதாக புகழேந்தி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதேபோல் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உட்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஆனால் அதிமுக வேட்பாளர் அறிவிக்க தாமதமாகி வந்தது. இதனிடையே நேற்று பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியிருந்தார். இதனால் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று தெரியாமல் இருந்தது.

இரட்டை இலை யாருக்கு?
இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் நின்று பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தயார்
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்தது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டது குறித்து புகழேந்தி கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளார்.

பாஜக நிலைப்பாடு?
பாஜக போட்டியிடவில்லை என்றால் நிச்சயம் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை நிறுத்துவார் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பாஜக ஆதரவு ஓபிஎஸ் அணிக்கா அல்லது எடப்பாடி பழனிசாமி அணிக்கா என்பது தெரிய வரும்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications