பாஜக அரசு மாறிடுச்சு.. கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம்.. இதுதான் காரணம்.. டிடிவி தினகரன் பரபர!
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது, எனவே நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதைக் குறைத்துள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

தினகரன் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாக கூறியிருந்தேன்.
தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதைக் குறைத்துள்ளோம். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என போன்றவற்றை முன்பு தமிழ்நாட்டில் திணித்த பாஜக அரசு தற்போது திணிப்பதில்லை.
வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும். திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் நடந்து கொள்வது அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. " எனத் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்றது. டிடிவி தினகரனின் அமமுக இந்த தொகுதிகளில் மொத்தமாக ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கினார்.
எதிர்வரும் தேர்தலில் இவர் ஓபிஎஸ்ஸுடன் கைகோர்க்க இருப்பதாக அவரே உறுதி செய்துள்ளார். மேலும் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்துள்ளார். இதனால், இந்தக் கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications