இன்று மாலை செம மழை இருக்கு.. சென்னையில் வானிலை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு!
தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் முறையாக மழை காலம் துவங்க உள்ளது. ஆனாலும் கூட இப்போதே தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

அதேபோல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்போதும் மேக மூட்டத்துடன் காணப்படும் சென்னையிலும் இன்று மழை பெய்யும்.
ஆம் சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்யும். ஆனால் சென்னை முழுக்க இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள அணைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி வருகிறது. தற்போது பெய்யும் மழை காரணமாக அணைகள் கொஞ்சம் வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளது. இது சில நாட்களுக்கு தண்ணீர் பிரச்சனையை கொஞ்சம் குறைக்கும்.
தற்போது கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் லேசாக மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்கு மேல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, தேனி, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications