சூறைக்காற்று அடிக்கும்.. இன்று நல்ல மழை பெய்யும்.. தமிழகத்தில் இங்கெல்லாம் மழை இருக்கு மக்களே!
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஆனாலும் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து கொஞ்சமாக சூட்டை தணித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தது
தமிழகத்தில் நேற்றுதான் வடமாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்தது. தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் கொடைக்கானல், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்தது.

இன்றும் மழை பெய்யும்
அதன்படி இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், விழுப்புரம், ஓசூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலைக்கு மேல் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏன் மழை
ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் வெப்பச்சலனம் நிலவி வருகிறது. இதனால்தான் கோடை காலத்திலும் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று இதனால் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்.

இன்னும் இருக்கு
அதேபோல் தமிழகத்தில் இன்று மட்டுமில்லாமல் இந்த மாதம் முடியும் வரை பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவினாலும், இந்த மழையால் கொஞ்சம் வெப்பநிலை குறையும்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications