கோடிகளை கொட்டி வாங்கும் சொகுசு அடுக்குமாடி வீடு.. இப்படித்தான் இருக்கும்.. சென்னை நெட்டிசன் பதிவு
சென்னை: கோடி ரூபாய் செலவு செய்து சொகுசு அடுக்குமாடி வீடுகளை மக்கள் வாங்கினாலும் வார இறுதிகளில் அந்த வீடுகள் எப்படி இருக்கும் என்பதை கிண்டல் செய்து பெண் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பதிவில், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, இத்தாலிய மார்பிள், ஜெர்மன் கிச்சன், அழகிய பால்கனி எனப் பிரம்மாண்டமான 'ஹிரானந்தானி' சொகுசு அடுக்குமாடி வீட்டினை மக்கள் வாங்குவார்கள். ஆனால், துணி காயப்போடும் நாள் வந்துவிட்டால், அந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பால்கனிகள் அனைத்தும் 'தோபி காட்' போல மாறிவிடும்.. அதாவது சலவைத் தொழிலாளர்கள் துணி துவைத்துக் காயப்போடும் இடம் போல் மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
அக்ஷிதா நிலாப் என்ற பெண் நெட்டிசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அடுக்குமாடி வீடுகளின் வாழ்க்கையின் எதார்த்தை நகைச்சுவையாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவினை அப்படியே பார்ப்போம். ஹிரானந்தானிக்கு (அடுக்குமாடி வீடு) வரவேற்கிறோம்: பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்கும் அன்றாட யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடு பற்றி பார்ப்போம்.

மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துச் சொகுசு அடுக்ககங்களை வாங்குவார்கள். அதன்பின்னர் வீட்டின் அறைகள், பால்கனி, சமையலறை போன்றவை எந்தெந்த இடத்தில், எவ்வளவு அளவில் அமையப் போகின்றன என்பதை குறிக்கும் வீட்டின் வரைபடத்தை மாதக்கணக்கில் ஆராய்வார்கள்; கடல் வியூ அப்பார்ட்மெண்டா அல்லது சிட்டி வியூவில் குடியிருப்பு உள்ளதா அல்லது லேக் வியூவில் வீடு உள்ளதா என்று விவாதிப்பார்கள்; இத்தாலிய மார்பிள்கள், ஜெர்மன் சமையலறைகள், சூப்பர் செதுக்கப்பட்ட அழகிய கட்டிட வடிவமைப்புடன் முகப்புகள் மற்றும் "உயர்தர வாழ்க்கையை" வாக்குறுதி அளிக்கும் விளம்பரப் புத்தகங்களை வியந்து பார்ப்பார்கள்.
பிறகு துவைக்கும் நாள் வரும். அந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பால்கனி, ஒரு முழுமையான 'தோபி காட்' ஆக மாறும். அதாவது சலவைத் தொழிலாளர்கள் துணி துவைத்துக் காயப்போடும் இடம் போல் மாறிவிடும் . மெத்தை விரிப்புகள் தேசியக் கொடிகளைப் போலப் பறக்கும், துண்டுகள் வான்வெளியில் வித்தை காட்டும், பைஜாமாக்கள் பெருமையோடு அசைந்தாடும், எப்போதுமே ஒரு ஜோடி சாக்ஸ் கட்டிடக் கலைக்கே எந்த மரியாதையும் தராமல் தொங்கும்.
இந்தக் கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான பாணியில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் வாழ்பவர்கள் அதை இந்திய நடைமுறை வாழ்க்கையின் காலத்தால் அழியாத பாணியில் மறுவடிவமைப்பு செய்துவிட்டார்கள். ஒருவேளை ஒவ்வொரு சொகுசு அடுக்குமாடி வீடுகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்போடுதான் வர வேண்டும் போல... வீட்டின் வெளிப்புறக் காட்சி மாறுதலுக்கு உட்பட்டது. வார இறுதிகளில், உங்களின் அழகிய வானத்தின் வியூவில், உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மெத்தை விரிப்புகளும், டி-ஷர்ட்டுகளும், மூன்று தலைமுறைகளின் காயப்போடப்பட்ட துணிகளும் இடம்பெறலாம். இறுதியாக எவ்வளவு கோடி செலவழித்து வாங்கினாலும், கெத்தாக இருக்கும் அந்த வீட்டினை பால்கனியில் காயும் ஒரே ஒரு துணிக்கொடி மிகச் சாதாரணமானதாக மாற்றிவிடுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு பல்வேறு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், இது பில்டரின் தவறு, மக்களின் தவறு அல்ல. நம்மைப் போன்ற வெப்பமான நாடுகளில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைப்பதால், துணி உலர்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதையே நாம் விரும்புவோம். இதைத் தவிர்க்க, பால்கனிகள் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; இல்லையெனில், மக்கள் இதற்கான வழிகளைத் தாங்களே கண்டறிந்துதான் தீருவார்கள்" என்றார்.

இரண்டாவது நெட்டிசன் கூறுகையில், துணிகளை உலர்த்துவது குறித்து உங்கள் ஆலோசனை என்ன? நல்ல காற்றோட்டமும் அதிக சூரிய வெளிச்சமும் கொண்ட பால்கனிதான் துணிகளை உலர்த்துவதற்குச் சிறந்த இடம்; இதில் காற்று மற்றும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. வேறு மாற்று வழி என் என்ன என்று சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், பில்டர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கவனத்திற்கு: பால்கனிகளைத் துணி துவைக்கும் இடமாக மாற்றாதீர்கள்; ஆனால், பல அடுக்குக் குடியிருப்பு வளாகங்களில் இதற்கு என்னதான் தீர்வு என்பதை தெளிவாக கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
