18 பேருடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகை செய்த காரியம்! நிஜ நடிகைகளுக்கே சவால் விட்ட அந்த AI பெண்! அமேசிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தொழில்நுட்ப உலகம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், இப்போது ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர வைத்திருக்கிறது ஒரு ஏஐ பெண் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நடிகையாக வலம் வரும் டில்லி நார்வுட் என்பவரை பற்றின செய்திதான் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற அச்சம் பரவலாகவே நிலவி வருகிறது.. எங்கு பார்த்தாலும் AI மட்டுமே ஆக்கிரமித்து கிடக்கிறது..

AI Actress

ஏஐ கலைப்படைப்பு

இந்த சூழலில், மனிதர்களும் ஏஐ-யும் இணைந்து ஒரு கலைப்படைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் தற்போது வெளியாகி உள்ளது..

ஆம்.., டில்லி நார்வுட் என்ற அந்த ஏஐ நடிகை, 18 மனிதக் கலைஞர்களுடன் இணைந்து நிஜ மனிதரைப் போலவே நடித்து ஒரு புதிய இசை வீடியோவை வெளியிட்டுள்ளார்.. ஹாலிவுட் ஆஸ்கார் கொண்டாட்டங்களுக்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியொரு புதிய இசை வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார் இந்த நடிகை..

ஹாலிவுட் நடிகை

வெறும் கம்ப்யூட்டர் மட்டும் இல்லாமல், நிஜ மனிதர்களை போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. இந்த ஒரு வீடியோவை உருவாக்குவதற்கு பின்னால் சுமார் 18 நிஜ மனித கலைஞர்களின் அயராத உழைப்பு ஒளிந்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விஷயம்..

நிஜ நடிகைகளுக்கு போட்டியாக ஒரு ஏஐ உருவம் இவ்வளவு தத்ரூபமாக திரையில் தோன்றுவது, எதிர்காலத் சினிமா துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்,

இருந்தாலும், இந்த வீடியோவிற்கு இணையதளங்களில் கிடைத்து வரும் வரவேற்பு என்பது கலவையான ஒன்றாகவே இருக்கிறது.. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இந்த வீடியோவில் ஏதோ ஒரு குறை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

டில்லி நார்வுட்டின் சபாஷ்

குறிப்பாக, டில்லி நார்வுட்டின் உடல் அசைவுகளும், முக பாவனைகளும் ஒருவிதமான செயற்கைத்தன்மையுடன் இருப்பதாக சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.. மனிதர்களின் கண்களில் இருக்கும் அந்த உயிர் துடிப்பு இந்த ஏஐ நடிகையிடம் இல்லையாம்.. இதுதான் பலருடைய ஆதங்கமாக இருக்கிறது..

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக இது ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் இது திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனங்களே மேலோங்கி நிற்கின்றன..

18 கலைஞர்கள் படைப்பு

18 கலைஞர்கள் சேர்ந்து செதுக்கிய ஒரு படைப்பு ஏன் ரசிகர்களின் மனதை முழுமையாக வெல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. ஸ்கிரீனில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ஒரு மனித நடிகை வெளிப்படுத்தும் அந்த ஆன்மார்த்தமான உணர்வுகளை ஒரு மென்பொருளால் ஈடு செய்ய முடியுமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது..

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்தை நமக்குக் காட்டினாலும், மனித உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஈடு இணை எதுவுமில்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.. எனினும், ஏஐ-யின் இந்த அசுர வளர்ச்சி கலை உலகிற்கு வரமா அல்லது சாபமா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+