இன்று ரொம்ப முக்கியம் - ஒரே நாளில் பள்ளி கல்லூரி தொடர்பான 3 முக்கிய அறிவிப்புகள்.. இதை படிங்க!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் தொடர்பாக இன்று ஒரே நாளில் 3 முக்கியமான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகளை வரிசையாக காணலாம்.
அறிவிப்பு 1 : தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வு ரேங்க் அடிப்படையில் நடந்து முடிந்த நிலையில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட வரை நடக்கும். ஜூன் 22-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது.
முதலில் 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்பின் கடந்த மாதம் 25ம் தேதி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.
அறிவிப்பு 2 : தமிழ்நாட்டில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பெயர், பிறந்த தேதி, புகைப்படம் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம் அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பள்ளி மாணவ மாணவியர் விவகாரங்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 3 : தமிழ்நாட்டில் இன்று 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. 1-5ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.

அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி அதாவது இன்று திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
வெயில் குறையவில்லை: அதே சமயம் தமிழ்நாட்டில் இன்னும் வெயில் குறையவில்லை. கடந்த வாரங்களில் நிலவிய அதே வெயில் இன்னமும் நீடிக்கிறது. முக்கியமாக சென்னையில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications