விஜய்யின் தவெகவினர் தேர்தல் நாளில் செய்த அலப்பறைகள்.. ஷாக்கில் பெரிய கட்சிகள்.. தல வலிக்குதுடா சாமி.. தல வலிக்குது!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் விஜய்யின் தவெகவினர் செய்த அலப்பறை சம்பவங்களை இங்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பார்க்கலாம்.
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்று 4 முனை போட்டி உள்ளது. விஜய்க்கு மாநிலம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதோடு பிரசாரங்களில் அவர் செல்லும் இடங்களில் கூட்டங்கள் அலைமோதியது. இதனால் அவரால் தேர்தலில் எத்தகைய தாக்கம் ஏற்பட போகிறது? என்பது தொடர்ந்து விவாதமாகி வந்தது.

எனவே இந்த தேர்தல் சற்று வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது. அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்த தமிழக சட்டசபை தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எப்போதும் காலை 7 மணிக்கு பூத் முகவர்கள், வயதானவர்கள் தான் முதல் ஆளாக வாக்களிப்பார்கள். ஆனால் இன்று பல பூத்களில் இளம்பெண்கள், இளைஞர்கள் ஆர்வமாக சென்று வாக்களித்தனர்.
அதேபோல், தேர்தல் என்றால் எப்போதும் அலட்சியமாக இருக்கும் பல இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வந்து வாக்களித்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி நடந்து வருகிறது என்றாலும் கூட இந்த முறை நிறைய பேர் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பெரும்பாலானவர்கள் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினரை சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டனர். குறிப்பாக தவெகவினர் நிறைய பேர் இருந்தனர். இன்றைய சட்டசபை தேர்தலில் தவெகவினர் செய்த பல சம்பவங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தவெகவினரின் செயலால் கலங்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் பதிவிட்டு வருகின்றனர். தவெகவினரின் சில அலப்பறையான விஷயங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.
* இன்றைய தேர்தலின்போது தவெகவினர் நடிகர் விஜய் அணிவது போல் வெள்ளை நிற சட்டை மற்றும் சந்தண நிற பேண்ட் அணிந்து வாக்கு செலுத்தினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அத்தகைய உடை அணிந்து வாக்களித்ததை பல இடங்களில் காண முடிந்தது.

* வாக்குச்சாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடின் தவெகவிற்கு ஓட்டு என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.
* அரூரில் பணப்பட்டுவாடா செய்த நபரை தவெகவினர் விரட்டி சென்றனர். தவெகவினரை கண்டதும் அவர் ஓட்டம் பிடித்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
* திருப்பத்தூர் தொகுதியில் தவெகவை சேர்ந்த ஒருவர் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டதை வீடியோ எடுத்து போலீசில் சிக்கி உள்ளார். அவர் பெயர் சக்திவேல். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
* நேற்றைய தினம் சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காததால் சில இளைஞர்கள் லாரிகளில் லிப்ட் கேட்டு ஊருக்கு சென்றனர். அவர்கள் வெளியிட்ட வீடியோவில் விஜய் அண்ணனுக்காக ஓட்டுப்போட செல்கிறோம் என்று தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications