Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைநகர் சென்னைக்கு ‘டாப் டக்கர்’ திட்டங்கள்.. TN பட்ஜெட்டில் வெளியான அசத்தலான அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட்டில் தலைநகர் சென்னைக்கு பல்வேறு அசத்தலான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 50 லட்சம் பேர் வசிக்கும் சென்னைக்கு இந்த பட்ஜெட்டில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சென்னையை மையமாக வைத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் நதிகளை சுத்தப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியமைச்சர் பட்ஜெட் ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளார்.

தலைநகர் சென்னை

தலைநகர் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், அதிகமான மக்கள் வசிப்பது மட்டுமன்றி, அரசு மற்றும் தனியார் துறைகளின் தலைமை அலுவலகங்களும், பெரும்பாலான ஐடி நிறுவனங்களும் சென்னையில்தான் உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாவட்டமாக உள்ளதால், வேலைவாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

இலவச வைஃபை - மெட்ரோ திட்டம்

இலவச வைஃபை - மெட்ரோ திட்டம்

பூந்தமல்லி - கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணி மனைகள் ரூ 1200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 7 மாநகராட்சிகளின் முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி திரையரங்கம்

திறந்தவெளி திரையரங்கம்

சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட திட்டங்கள் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்குகள், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகள் ஏற்படுத்தப்படுன் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் நவீன உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை திட்டம்

கழிப்பறை திட்டம்

சென்னை மாநகராட்சியில் கழிப்பறைகள் கட்டவும், ஏற்கனவே இயங்கி வரும் பொதுக் கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகளை மேம்படுத்தவும் ரூ. 430 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 430 கோடி ரூபாய் செலவில் அரசு, தனியார் பங்களிப்புடன் ஒரு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் சென்னையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆறு பூங்கா

அடையாறு ஆறு பூங்கா

அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கு ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விளையாட்டு மையம்

உலகளாவிய விளையாட்டு மையம்

சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சி.டி.எம்.ஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார். சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வசதிகளை புதுப்பிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் தணிக்கும் திட்டங்கள் மற்றும் நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்த ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள கலைஞர் நினைவு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட சென்னை வளர்ச்சி திட்டம்

வட சென்னை வளர்ச்சி திட்டம்

சென்னையில் சீரான சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வட சென்னை பகுதிகளை மேம்படுத்தும் வகையில், "வட சென்னை வளர்ச்சி திட்டம்" என்ற திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நான்குவழி மேம்பாலம்

நான்குவழி மேம்பாலம்

ரூ.621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.

 சென்னையில் தொடங்கப்படும்

சென்னையில் தொடங்கப்படும்

மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் அவலத்தால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான திறன் பயிற்சி, உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான மானியங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். கண்ணகி நகர், நாவலூர், அத்திப்பட்டு மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் விளையாட்டு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+