நீ பாதி.. நான் பாதி.. 50க்கு 50 சான்ஸ்.. சென்னையில் அடுத்த 7 நாள் வானிலை என்ன? தேதி வாரியாக முழுவிபரம்
சென்னை: சென்னையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. அதன்பிறகு ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்து தாழ்வு நிலை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை கிடைத்தன.
அதன்பிறகு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால் வடமாவட்டங்கள் மழை பெற்றன. மேலும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் அதிக மழையை பெற்றன. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்துள்ளன.

இடி -மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தான் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் தெரிவித்தது. அதன்பிறகு டிசம்பர் 19 ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கணித்து இருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு?
மேலும் அடுத்த 48 மணிநேரத்தை பொருத்தமட்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதகிளில் வானம் ஓரளவு மேமகூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 7 நாள் எப்படி?
இதன் தொடர்ச்சியாக தான் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் ஒருவாரம் நிலவும் வானிலையை கணித்து அந்த மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 17 முதல் 21ம் தேதி வரை
இதையடுத்து டிசம்பர் 17 ம் தேதியான சனிக்கிழமை முதல் டிசம்பர் 19ம் தேதி வரையிலான திங்கட்கிழமை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதோடு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு டிசம்பர் 20ம் தேதியான செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 21ம் தேதியான புதன் கிழமை ஆகிய 2 நாட்கள் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதோடு, மிதமான மழை பெய்யலாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications