நீங்க எம்ஜிஆர் வாரிசு..நீங்களா இப்படி? பாக்யராஜிடம் நேரடியாக கேட்ட ஓபிஎஸ்! ஹோட்டலில் ‘சூப்பர்’ சீன்!
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எம்.ஜி.ஆர்.ஆல் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்ட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் திடீரென இணைந்துள்ள நிலையில் அவர் இணைவதற்கு முன்னதாக சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களால் கட்சி இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. சொல்லப்போனால் சசிகலா தினகரன் சேர்த்தால் நான்காகவே பிரிந்திருக்கிறது என்று கூறலாம் அந்த அளவுக்கு அதிகார மோதல்களால் சுருண்டு போனது அதிமுக.
அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எழுப்பியதோடு தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இரு அணிகள்
இந்த நிலையில் தான் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில் பெரும் பிரளயமே ஏற்பட்டது. அதுவரை அதிமுகவில் அதிகாரம் பொருந்தியவராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதன் பின்னர் சரிவு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் சட்ட போராட்டத்தை துவக்கி இருக்கிறார் எடப்பாடி. அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வரை அதிமுகவில் இரு அணிகளாக தொடர்கிறது.

பாக்யராஜ்
இந்த நிலையில் தான் அதிமுகவில் தனியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த பாக்யராஜ் நேற்று அவரை நேரில் சந்தித்து அவரோடு இணைந்தார். எம்ஜிஆர் இருந்தபோது தனது கலை உலக வாரிசு என அவராலேயே அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்து கையை சுட்டுக் கொண்ட நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக ஆதரவாளராக வலம் வந்தார்.

நீண்ட யோசனை
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் பேசிய கருத்து பரபரப்பை கிளப்பிய நிலையில் அடுத்த நாளே மன்னிப்பு கேட்டதோடு விவகாரம் முடிந்து போனது. இதை அடுத்து ஒரு மாத காலம் அரசியல் நிகழ்வுகளில் தலைகாட்டாத பாக்யராஜ் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அப்போது அங்கு வந்த பாக்கியராஜ் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாகவும் கூறினார்.

பேச்சுவார்த்தைகள்
இந்த நிலையில் அதிமுகவில் பாக்யராஜ் சேர்ந்தது ஒன்றும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு அல்ல எனவும் நீண்ட காலமாகவே இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறுகின்றனர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாக்யராஜ் பிரதமர் மோடி குறித்த பேச்சு சர்ச்சையில் ஏற்பட்ட போது ஓ பன்னீர்செல்வம் அவரை நேரடியாக தொடர்பு கொண்டதாகவும் நம் கட்சி இருக்கும்போது எதற்கு தேவையில்லாமல் பாஜகவில் சேர்ந்து தேவையில்லாமல் இந்த பிரச்சினைகள் என பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே நீண்ட யோசனைக்கு பிறகு அதிமுகவில் சேர்ந்துள்ளார் பாக்யராஜ்.

கலங்கிய தொண்டர்கள்
முன்னதாக அதிமுகவில் இணைவதற்கு பாக்கியராஜ் சம்மதம் தெரிவித்ததும் குறிப்பிட்ட அந்த நட்சத்திர விடுதியில் சந்திப்பு நடத்தலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்கியராஜ் முதலிலேயே தனியார் விடுதியில் காத்திருக்க முடிவு செய்ததாகவும் ஓபிஎஸ் அடுத்து வந்து அவரை சந்திப்பதாகத் தான் ஏற்பாடு. ஆனால் நீங்கள் எம்ஜிஆர்ஆல் வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் எனவே நான் முதலில் காத்திருக்கிறேன். நீங்கள் வந்து இணைந்து கொள்ளுங்கள் என பேசி இருக்கிறார் ஓபிஎஸ். இப்படி இருவரும் மாறி மாறி பாச மழை பொழிய அங்கிருந்த நிர்வாகிகள் கண்கள் கலங்காத குறையாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
-
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ்












Click it and Unblock the Notifications