சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றை பாலம் ‘ஒன் வே’! அன்பில் மகேஷ் கான்வாய் சார்ச்சை குறித்து வெளியான விளக்கம்! இது தான் நடந்ததாம்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கான்வாய் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வரும் நிலையில் உண்மையில் அன்று நடந்தது என்ன என்பது குறித்தான விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு அனைவராலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்ற கால்வாய்க்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

பாலத்தின் ஒரு முனையில் ஆம்புலன்ஸ் ஒன்று காத்திருக்கும் நிலையில் அந்த பாலத்தின் வழியாக சில நொடிகள் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியின் பாதுகாப்பு வாகனம், அவரது வாகனம் மற்றும் கட்சியினர், அதிகாரிகளின் வாகனங்கள் செல்கின்றன.

கையில் ஸ்பீக்கரோடு வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகையில் ஸ்பீக்கரோடு வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆம்புலன்ஸ் சர்ச்சை

ஆம்புலன்ஸ் சர்ச்சை

அந்த வாகனங்கள் அனைத்தும் சென்றதற்குப் பிறகு ஆம்புலன்ஸ் பாலத்தை கடந்து செல்கிறது. அமைச்சர் ஒருவரின் கான்வாய்க்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. பலரும் இதுகுறித்து விவாதித்து வரும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கர்நாடக பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லணையில் இருந்து கும்பகோணம் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

விளக்கம்

விளக்கம்

அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை பகுதியில் செல்லும் போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அணைக்கரை பாலம் ஒரு வழிப்பாதை என்பதால் குறுகிய பாலத்தின் வழியே ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் இதன் காரணமாக எந்த பகுதியில் வாகனம் நுழைந்தாலும் எதிரே வாகனம் செல்ல முடியாது.

கேள்விகள்

கேள்விகள்

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் உள்ளே நுழைந்து விட்டதாலும் பின்னால் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் ரிவர்ஸ் எடுக்க முடியாது என்பதாலும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றொரு ஓரத்தில் காத்திருந்ததாகவும் அமைச்சர் விரைவாக கடந்து சென்ற பின்பு ஆம்புலன்ஸ் கடந்து சென்றதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதற்காக வழியை விட்டு அமைச்சர் காத்திருந்திருக்கலாமே எனவும் பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
While a video is being shared on social media that an ambulance was stopped for Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poiyamozhi's convoy, an explanation is being given as to what actually happened that day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X