தோனி முதல் சிம்பு வரை.. எல்லோரும் இந்த டீ ஷர்ட்டை அணிவது ஏன்? இவ்வளவு விலையா? அப்படி என்ன சிறப்பு?
சென்னை: இந்தியாவின் பெரிய பிரபலங்கள் பலர் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் டீ ஷர்ட்டை அணிந்து பொது இடங்களுக்கு வருவது வைரலாகி வருகிறது. அது என்ன டி ஷர்ட்.. ஏன் இப்படி பலரும் அதை அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.
சமீபத்தில் சினிமா விழாக்கள், அல்லது ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை பார்த்து இருந்தீர்கள் என்றால் அதில் பிரபலங்கள் பலர் Balmain என்ற பெயர் கொண்ட உடையை அணிந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயன் இந்த உடையை அணிந்து இருந்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் விழா ஒன்றில் கருப்பு டி ஷர்ட்டில் Balmain என்று பொறிக்கப்பட்ட உடையை அணிந்து இருந்தார்.

என்ன உடை?
அதே நிற உடையை நடிகர் தனுஷும் விழா ஒன்றில் அணிந்து இருந்தார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இந்த Balmain டி ஷர்டை அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனும் இதே போன்ற கருப்பு நிற Balmain டி ஷர்டை அணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தார். ஷாருக்கானுக்கு இதே கருப்பு நிற Balmain உடையை அணிந்து இருந்தார். இப்படி சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலகிலும் பலர் Balmain உடையை அணிந்துள்ளனர்.

Balmain உடை?
கிரிக்கெட் வீரர் தோனி தொடங்கி இன்னும் பல விளையாட்டு வீரர்கள் Balmain உடையை அணிந்து பொது இடங்களில் தோன்றி வருகிறார்கள். அதேபோல் சல்மான் கானும் Balmain டி ஷர்டை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்களின் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் உடை இந்த Balmain உடைதான். இது பாரிஸை சேர்ந்த நிறுவனம் Balmain என்ற நிறுவனத்தின் உடை ஆகும்.

எப்போது தொடங்கப்பட்டது
1945ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. பியர் பால்மாமின் என்பவர் மூலம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுக்க இந்த நிறுவனம் ஜாக்கெட், டி ஷர்ட், பேண்ட் உள்ளிட்ட பல்வேறு உடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அதோடு இந்த நிறுவனம் ஜப்பான், சீனா, இத்தாலி, பல்கெரியா, போர்ச்சுகல், போலந்து உள்ளிட்ட நாடுகளில் டி ஷர்ட் உற்பத்தியையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

எவ்வளவு?
உலகம் முழுக்க 16 பெரிய நகரங்களில் இந்த நிறுவனம் ஷோ ரூம் வைத்துள்ளது. 2016ல் Mayhoola Investments என்ற நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியது. மொத்தம் 548 மில்லியன் டாலருக்கு இந்த நிறுவனம் வாங்கப்பட்டது. இதன் நிகர வருட வருமானம் 136 மில்லியன் டாலரை விட அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் உண்மையான நிகர வருமானம் இந்த நிறுவனம் மூலம் வெளியிடப்படவில்லை என்பதே உண்மை.
Recommended Video

ஏன் முக்கியம்?
உலகம் முழுக்க பெரிய பிரபலங்கள் இந்த நிறுவன உடைகளை அணிந்து வருகிறார்கள். இது ஒரு பணக்கார ஸ்டேட்டஸ் உடையாக பார்க்கப்படுகிறது. இந்த ஒரு கருப்பு நிற Balmain டி ஷர்ட் விலை மட்டும் ரூபாய் 49 ஆயிரம் ஆகும். ஆம் இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய். விலைக்கு ஏற்றபடி நீண்ட தரம் கொண்டது. அதேபோல் ரிச் லுக் கொண்டது ஆகும். இணையத்தில் சமீப காலமாக இப்போது Balmain டீ ஷர்ட் உடைகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications