சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இதுதான் திராவிட மாடல்! இதை செய்தது திமுக.. குஜராத் மாடலை விட பெஸ்ட்!" டேட்டா உடன் வந்த பிடிஆர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டிற்கும் குஜராத்திற்கும் வளர்ச்சியில் என்ன வித்தியாசம் என்பதை விளக்கம் வகையில் டேட்டா ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு "திராவிட மாடல்" வளர்ச்சி என்பதை முன்னெடுத்து வருகிறது. அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட மாடல் வளர்ச்சி என்று விளக்கியுள்ளனர்.

திராவிட மாடல் வளர்ச்சிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் தொடர்ந்து பல கருத்துகளைக் கூறி வருகிறார். இதற்கிடையே அப்படியொரு கருத்தைத் தான் அவர் இப்போது மீண்டும் டேட்டாவுடன் பகிர்ந்துள்ளார்.

சூப்பர்! புயல் முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கை சிறப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி, ராமதாஸ் பாராட்டு!சூப்பர்! புயல் முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கை சிறப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி, ராமதாஸ் பாராட்டு!

வறுமைக் கோட்டிற்குக் கீழ்

வறுமைக் கோட்டிற்குக் கீழ்

திமுக ஐடி விங் நிர்வாகியான சேலம் தரணிதரன் தனது ட்விட்டரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் தொடர்பான ஒரு டேட்டாவை பகிர்ந்திருந்தார். அதில் 2019- 2021 வரை பல்வேறு மாநிலங்களிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் சுமார் 15% உள்ளனர். அதேநேரம் தமிழ்நாட்டில் 5% கீழாக மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர். அதிலும் குறிப்பாகப் பெரிய மாநிலங்களில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் தான் வறுமைக் கோட்டிற்குக் கீழ் குறைவான நபர்கள் உள்ளனர்.

அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இந்த டேட்டாவை பகிர்ந்த சேலம் தரணிதரன், "குஜராத் மற்றும் தமிழ்நாடு என இரண்டு மாநிலத்திலும் தனிநபர் ஜிடிபி என்பது கிட்டதட்ட ஒரே மாதிரி உள்ளது. அதேநேரம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களை எடுத்துப் பார்த்தால், தமிழ்நாட்டைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமானோர் குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர். குஜராத்தில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே செல்வம் குவிந்து கிடப்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் இது பரவலாக்கப்பட்டுள்ளது. இது தான் குஜராத் மாடலுக்கும் தமிழ்நாடு மாடலுக்கும் உள்ள வித்தியாசம்" என்று பதிவிட்டுள்ளார்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமைச்சர் பிடிஆர், வேறு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து, "முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தேர்தல் வெற்றி என்பது நமது இலக்குகளான திராவிட தத்துவத்தை (சமூக நீதி, சம அணுகல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி) உள்ளிட்ட இலக்குகளைச் செயல்படுத்தும் பாதையாகும். மற்ற அரசியல் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பகிர்ந்த தரவுகளில் ஒன்றில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்கம் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

குஜராத் மாடல்

குஜராத் மாடல்

அதில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமூகப் பணிகளுக்கு அதிகம் செலவிடப்பட்டு வந்த நிலையில், பாஜக ஆட்சியில் அது சுமார் 50% வரை குறைந்த காட்டுகிறது. அமைச்சர் பிடிஆர் பகிர்ந்த மற்றவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: 6.2 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் பாஜக இந்த வாரம் தொடர்ந்து 7ஆவது முறையாக வென்ற போதிலும், அங்கு இன்னும் கூட, சமூக வளர்ச்சி குறியீடுகள் பின்தங்கி இருக்கிறது. சராசரி ஆயுட்காலம், கல்வி, வருமானம் ஆகியவற்றைக் கணக்கிடும் வளர்ச்சிக் குறியீட்டில், குஜராத் 21ஆவது இடத்தில் உள்ளது. குழந்தை திருமணம், குழந்தை வளர்ச்சி, குழந்தை இறப்பு, பள்ளி மற்றும் கல்லூரிச் சேர்க்கை விகிதங்களிலும் கீழ்ப் பாதியில் உள்ளது.

பரவலாக்கப்பட்ட வளர்ச்சி

பரவலாக்கப்பட்ட வளர்ச்சி

கடந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தமிழ்நாட்டுடன் ஒத்துப்போகியுள்ளது. இருப்பினும், ஆனால், அங்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் 14% பேர் உள்ளனர். இது தமிழ்நாட்டை விடக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். மோசமான நிலையில் உள்ள இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்து வத்த பாஜக பெரியளவில் எதையும் செய்யவில்லை. குழந்தை இறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவுக்கே குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.இது பங்களாதேஷ் மற்றும் இலங்கையை விட அதிகமாகும்.

குறையும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்

குறையும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்

2018இல் ஐந்தாம் வகுப்பில் உள்ள கிராமப்புற குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடியவில்லை. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இப்போது நிலைமை மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதற்கு பாஜக எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்பதையே காட்டுகிறது. உணவு மற்றும் எரிவாயு மானியம் போன்ற நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நீண்ட கால சராசரிக்கு ஏற்ப உள்ளது. இருப்பினும், வரி வருவாய் உடன் ஒப்பிடுகையில், முந்தை அரசுகளைக் காட்டிலும் மிகக் குறைந்த நிதியை மட்டுமே சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்குகிறது.

பாஜக வெல்வது எப்படி

பாஜக வெல்வது எப்படி

2018-19 ஆம் ஆண்டில், மொத்த ஜிடிபில் 3.2% மட்டுமே சுகாதாரத்திற்கு பாஜக அரசு ஒதுக்குகிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு, இது 3.9% ஆக இருந்தது. கல்விக்கு 6% நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3.1% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி சமமாக இல்லை என்பதால், நாட்டில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். குஜராத்தில் இப்போது வேலையின்மை 2.9%ஆக உள்ளது. 20 கோடி மக்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் வேலையின்மை 7.1%ஆக உள்ளது. இருந்த போதிலும் பாஜக எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் 1958க்கு பிறகு முதல் முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று அமைச்சர் பிடிஆர் பகிர்ந்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

English summary
Palanivel Thiagarajan compares Dravidian model and Gujarat model: Dravidian model is best says minister Palanivel Thiagarajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X