சொந்தமாக விவசாய நிலம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு என்ன? மனைவி பெயரில் எவ்வளவு உள்ளது?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி எடப்பாடி பழனிசாமியிடம் அசையும் சொத்து ரூ.50 லட்சம் உள்ளதாகவும், அசையா சொத்து எதுவும் இல்லை என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தன் பெயரில் விவசாய நிலம் இல்லை என்று கூறியுள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 8-வது முறையாக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கிறது. இதனால் அரசியல் களம் அனல் பறக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்புமனு நிறைவு பெற்றுள்ளது. முதல் நாளிலேயே முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
8-வது முறையாக எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மனைவி பெயரில் சொத்து
எடப்பாடி பழனிசாமியிடம் அசையும் சொத்து ரூ.50 லட்சம் உள்ளதாகவும், அசையா சொத்து எதுவும் இல்லை என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தன் பெயரில் விவசாய நிலம் இல்லை என்று கூறியுள்ளார். அவரது மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துக்களும், 2.16 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போதும் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், அசையும் சொத்தாக ரூ.47.64 லட்சம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அவரது மனைவி பெயரில் ரூ.1.04 கோடி அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியிடம் 100 சவரன் தங்க நகை இருப்பதாகவும், அவரது மனைவியிடம் 720 கிராம் தங்க நகை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்
தொடர்ந்து, ஏற்கப்பட்ட மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் நாளை மாலை வெளியாகும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 9 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும். வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. வரும் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications