Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’சார்பட்டா பரம்பரை’ துஷாரா அப்பா யார் தெரியுமா? திமுகவில் இவ்வளவு பெரிய புள்ளியா? லிஸ்டலயே இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சார்பட்டா பரம்பரை படத்தில் 'மாரியம்மா' கேரக்டர் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்த நடிகை துஷாரா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது பின்னணி என்ன? அவரது சொந்த ஊர் என்ன? என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

Recommended Video

    நம்முடைய பெருமை சர்வதேச அளவுக்கு போக வேண்டும் - Anbil Mahesh *Politics

    இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்து பெரு வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. சென்னையின் பாக்சிங் வரலாற்றை கண்முன் நிறுத்துவது போல எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் பொருளாதாரத்து ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

    இந்த படத்தில் 'மாரியம்மா' என்ற நடிகர் ஆர்யாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த துஷாரா விஜயம் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    துஷாரா விஜயன்

    துஷாரா விஜயன்

    முதல் படம் போல தெரியலையே! என ரசிகர்கள் பலரும் கொண்டாடிய நிலையில் உண்மையில் அது துஷாராவின் முதல் படம் அல்ல நடிகை துஷாரா விஜயன் மாடலிங்கில் இருந்து 2019ஆம் ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் முதல் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையாத நிலையில் பல குறும்படங்களில் நடித்து வந்தார்.

    மாரியம்மா

    மாரியம்மா

    இதை எடுத்தே ரஞ்சித் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரியம்மா என்று எங்கு சென்றாலும் அவரை அழைக்கும் வகையிலேயே அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறா.

     திமுகவில் முக்கிய புள்ளி

    திமுகவில் முக்கிய புள்ளி

    நட்சத்திரம் நகருகிறது என்ற இந்தப் படத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும், அது துஷாராவின் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் துஷாரா விஜயன் யார்? என தேடி வரும் நிலையில், திமுகவுக்கும் அவருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் அவர் தந்தை விஜயன் திண்டுக்கல் திமுகவில் மிகவும் முக்கிய புள்ளியாக வலம் வருபவர். சாணார்பட்டி விஜயன் என்றால் அவரை தெரியாதவர்களே திண்டுக்கல் திமுகவுல் இருக்க முடியாது.

    சாணார்பட்டி விஜயன்

    சாணார்பட்டி விஜயன்

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் தற்போது சாணார்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு அதாவது மாவட்ட கவுன்சிலர் ஆக இருக்கிறார், சாணார்பட்டி விஜயன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அவர் அமைச்சர் ஐ பெரியசாமியின் நெருக்கத்திற்குரிய நபர்களில் ஒருவர்.

     எளிமையாக பழகுவார்

    எளிமையாக பழகுவார்

    விஜயன் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40 வருடமா திமுகவில் கட்சிப் பணியில் உள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் இயற்கையாகவே திமுக தொடர்பான காட்சிகள் வந்துவிட்ட நிலையில் துஷாரவின் தந்தையும் திமுகவை சேர்ந்தவர் என்பதால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் சர்பட்டா பரம்பரை படத்தை கூடுதலா கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்காடி சொந்த ஊர் வரும் துஷாரா மக்களிடம் எளிமையாக பழகுவார் என்கின்றனர் அவரது ஊர்க்காரர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+