ரயிலின் சைடில் இருக்கும் "இந்த" நம்பரின் அர்த்தம் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!
சென்னை: ரயிலின் சைடில் இருக்கும் 5 இலக்க எண்களின் அர்த்தம் தெரியுமா? அந்த எண்கள் ஏன் இருக்கிறது என்று தெரியுமா?
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது.

அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.
உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன.
இப்படிப்பட்ட ரயில்களில் இருக்கும் 5 இழக்க எண்களின் அர்த்தம் குறித்து பார்க்கலாம்.
முதல் இலக்கத்தில் பின்வரும் ஏதாவது ஒரு நம்பர் இருந்தால் அதன் அர்த்தம் இதுதான்
0 - சிறப்பு ரயில்களுக்கு (எ.கா., விடுமுறை சிறப்பு ரயில்கள், பண்டிகை சிறப்பு ரயில்கள் போன்றவை)
1 - ராஜ்தானி, சதாப்தி, சம்பர்க் கிராந்தி, கரிப் ரத், துரந்தோ போன்ற அனைத்து நீண்ட தூர ரயில்களுக்கும் இந்த நம்பர் இருக்கும்.
2 - நீண்ட தூர ரயில்களுக்கு 1 இல் தொடங்கும் ரயில் எண்கள் தீர்ந்துவிட்டால் இது பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது 1ம் எண் சீரிஸ் முடிந்துவிட்டால் இரண்டாம் எண்பயன்படுத்தப்படும் .
3 - கொல்கத்தா புறநகர் ரயில்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
4 - சென்னை, புது தில்லி, செகந்திராபாத் மற்றும் பிற பெருநகரங்களில் உள்ள புறநகர் ரயில்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்..
5 - வழக்கமான பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
6 - MEMU ரயில்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். அதாவது குறைந்த தூரம் செல்லும் மின்சார சப் அர்பன் ரயில்கள்.
7 - DMU (DEMU) ரயில் சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். அதாவது இவை டீசல் வகை பாசஞ்சர்/
8 - புதிதாக ரிசர்வ் செய்யப்பட்டு உள்ள ரயில்கள்.
9 - மும்பை புறநகர் ரயில்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
இரண்டாவது டிஜிட்:
முதல் டிஜிட்டில் என்ன இருக்கிறது என்பதை பொறுத்தே இரண்டாவது டிஜிட் இருக்கும்.
எந்த மண்டலத்தை அந்த ரயில் சேர்ந்தது, எந்த பிரிவை சேர்ந்தது என்பதை இது குறிக்கும். இரண்டாவது இலக்கத்தில் பின்வரும் ஏதாவது ஒரு நம்பர் இருந்தால் அதன் அர்த்தம் இதுதான்
0 - கொங்கன் ரயில்வேக்கு.
1 - CR (மத்திய இரயில்வே), WCR (மேற்கு மத்திய இரயில்வே) மற்றும் NCR (வட மத்திய இரயில்வே).
2 - மண்டலங்களைப் பொருட்படுத்தாமல் சூப்பர் பாஸ்ட்கள், சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் வேறு சில வகை ரயில்களுக்கு இதுபொருந்தும். இவற்றுக்கு, அடுத்த இலக்கமானது பொதுவாக மண்டலக் குறியீடாக இருக்கும்.
3 - ER (கிழக்கு இரயில்வே) மற்றும் ECR (கிழக்கு மத்திய இரயில்வே).
4 - NR (வடக்கு இரயில்வே), NCR (வட மத்திய இரயில்வே) மற்றும் NWR (வட மேற்கு இரயில்வே).
5 - NER (வடகிழக்கு இரயில்வே) மற்றும் NFR (வடகிழக்கு எல்லை இரயில்வே).
6 - SR (தெற்கு இரயில்வே) மற்றும் SWR (தென் மேற்கு இரயில்வே).
7 - SCR (தென் மத்திய இரயில்வே) மற்றும் SWR (தென் மேற்கு இரயில்வே).
8 - SER (தென் கிழக்கு இரயில்வே) மற்றும் ECoR (கிழக்கு கடற்கரை இரயில்வே).
9 - WR (மேற்கு இரயில்வே), NWR (வட மேற்கு இரயில்வே) மற்றும் WCR (மேற்கு மத்திய இரயில்வே).
மூன்றாவது டிஜிட்:
எந்த மண்டலத்தில் அந்த ரயில் பராமரிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே மூன்றாவது டிஜிட் இருக்கும்.
கடைசி இரண்டு டிஜிட்கள்
முதல் 3 டிஜிட்க்கள் முடிந்த பின், ரயில்களை வேறுபடுத்தி காட்ட அடுத்த இரண்டு டிஜிட்க்கள் பயன்படுத்தப்படும். அதாவது சென்னையை சேர்ந்த இரண்டு ரயில்களுக்கு ஒரே நம்பர் இருக்க கூடாது என்பதற்காக இந்த நம்பர்கள் பயன்படுத்தப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications