இபிஎஸ் கைக்கு செல்கிறதா அதிமுக?.. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்.. "3-ல்" எந்த ரூட்டை தேர்வு செய்வார்?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதால் அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வைத்து ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என ஆவடி காவல் துறையும் கை விரித்துவிட்டது.

தொண்டர்கள்
எந்தவித சந்தேகமும் இன்றி அதிமுக தொண்டர்களின் பெரும்பாலான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்பது ஓபிஎஸ்ஸே அறிவார். பொதுக் குழு உறுப்பினர்கள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என ஓபிஎஸ் கடிதம் எழுதி கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்திவிட்டார்.

98 சதவீதம்
பொதுக் குழு உறுப்பினர்கள் 2600 க்கும் மேற்பட்டவர்கள், அதாவது 98 சதவீதம் பேர் பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் ஒற்றைத் தலைமைக்கான தங்களது ஆதரவையும் அவருக்கே தெரிவித்துள்ளார்கள். இப்படி ஒரு சூழலில் அவருக்கு இருந்த அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டதால் அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இத்தனை வழிகள்
முதல் வழி- ஓபிஎஸ் பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்வார் என்கிறார்கள். இரண்டாவது வழி- பொதுக் குழு கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் செல்வார், ஆனால் அங்கு நடக்கும் தீர்மானங்களில் கையெழுத்திட மறுப்பு தெரிவிப்பார். இல்லாவிட்டால் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் வாசிக்க தொடங்கும் போது ஓபிஎஸ் வெளிநடப்பு செய்ய வாய்ப்பிருக்கிறது.

எந்த வழியில் செல்வார் ஓபிஎஸ்
மூன்றாவது வழி- சசிகலாவை நேரில் போய் சந்தித்து ஆதரவு கோர வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என கட்சியினர் விரும்பினர். ஆனால் அதற்கான சூழல் சரியாக அமையாததால் சசிகலா ஏதேனும் முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டைகள் வந்தன. இதனால் ஓபிஎஸ் எப்படியும் நம்மை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம்.

என்ன செய்வார் ஓபிஎஸ்
ஒரு வேளை சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தால் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் கூடாரம் காலியாகி சசிகலா பக்கம் வரும் என்பது ஓபிஎஸ்ஸின் வியூகமாக இருக்கிறது. எத்தனையோ கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இருப்பது இந்த மூன்று வழிகள் அதில் எதை தேர்வு செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications