க்ளைமேக்ஸ் இன்று?.. சசிகலா விவகாரத்தில்.. அதிமுகவுக்கு பறந்து வந்த மேலிட உத்தரவு.. அடுத்து என்ன?

சசிகலாவை கட்சிக்குள் இணைப்பது குறித்து பாஜக முடிவு என்னவாக உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியில் சேர்த்து கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்த சசிகலா விஷயத்தில் அதிமுக தரப்பில் இன்று ஒரு முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது..!

Recommended Video

    ஐயோ சாமி.? வாங்க சாமி? | சிரிப்பே பதில் தான்- O Panneerselvam | Oneindia Tamil

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலா என்ற பேரை கேட்டாலே டென்ஷன் ஆனவர்கள் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மாஜிக்கள்தான்.

    எடப்பாடி பழனிசாமி சசிகலா பற்றி பேசுகிறாரோ இல்லையோ, இவர்கள் மட்டும் சசிகலாவை அதிக அளவு விமர்சித்து கொண்டே இருந்தனர்.. இப்போது இந்த மாஜிக்கள் அத்தனை பேரும் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    சசிகலா

    சசிகலா

    அதிலும் எடப்பாடி ஆதரவாளராக கருதப்படும் வேலுமணி கூட, சசிகலா பற்றி வாய் திறக்காமல் உள்ளார்.. ஜெயிலுக்கு போய் வந்ததில் இருந்தே ஜெயக்குமார் அமைதி நிலைமையில் உள்ளார்.. இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.. எனினும், எடப்பாடி விஷயத்தில் தொடர்ந்து பொறுமை காத்து வரும் சசிகலா, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி, அதிமுகவின் சீனியர்களை சந்தித்து பேச சொல்லி உள்ளார். அவர்களும் பேச்சுவார்த்தையில் மறைமுகமாகவே ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்ஸை பொருத்தவரை பிரச்சனையே இல்லை, அவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் வந்துவிடக்கூடும் என்றாலும், எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு ஆதரவு தருவதுதான் மிக முக்கியமான விஷயமாக அதிமுக வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.. சசிகலா உள்ளே வந்தால், மொத்த மன்னார்குடியும் உள்ளே வந்துவிடுமே என்ற கவலைதான் எடப்பாடிக்கு பிரதானமாக இருப்பதாக தெரிகிறது.

     முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    இந்நிலையில், இன்றைய தினம் 2 விதமான செய்திகள் வட்டமடிக்கின்றன.. சசிகலா சர்ச்சைக்கு, அதிமுகவில் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. சமீபத்தில் தேனியில், சசிகலா மற்றும் தினகரனை மறுபடியும் கட்சியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும் ஏன்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம், அதற்கு பிறகு ஓ.ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்த விவகாரம், என அடுத்தடுத்த 2 விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

     ஓ.ராஜா

    ஓ.ராஜா

    இதற்கு பிறகு ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வேறு வழியின்றி நீக்கம் தொடர்பான அறிவிப்பில், ஓபிஎஸ் கையெழுத்து போட்டார் என்றாலும், அவரது உண்மை நிலைப்பாடு தெரியவில்லை. இன்று சென்னை தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்து கொள்கின்றனர்.. மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வுக்கு வர உள்ளநிலையில், சசிகலா சர்ச்சைக்கு அநேகமாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     சுற்றுப்பயணம்

    சுற்றுப்பயணம்

    இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. சசிகலாவை இணைக்கும் முடிவை புறக்கணிக்கும்படி, அதிமுக தலைமையை, பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது... சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையானது, மத்திய உளவுத் துறை தரப்பில் பாஜக மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    அந்த அறிக்கையை தொடர்ந்து, அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பாஜக மேலிடம் ஓகே சொல்லவில்லையாம்..

    பாஜக

    பாஜக

    காரணம், சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் ஆதரவு மட்டும் தான் கிடைக்கும். ஆனால்,.. மற்ற ஜாதிகளால் பாதிப்பு ஏற்படும்... இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பலவீனத்தை ஏற்படுத்தும்... அதுமட்டுமல்லாமல், சசிகலா எந்த ஒரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை இதுவரை நிரூபிக்க முடியவில்லை.. எனவே சசிகலாவை கட்சியில் சேர்க்கும் முடிவை கைவிடும்படி அதிமுகவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+