வெடிக்க போகும் 4 கன்னி வெடிகள்.. எடப்பாடி மட்டும் பொதுக்குழு வழக்கில் தோற்றால் என்ன ஆகும்? பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வரும் பட்சத்தில் கட்சியில் பல முக்கிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை எதையும் விதிக்கவில்லை.
இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைத்துவிட்டன. இந்த வாரம் பெரும்பாலும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி தோல்வி அடையும் பட்சத்தில் பின்வரும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

கன்னி வெடி 1
எடப்பாடி கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் செல்வார். ஆனால் இரட்டை அமர்வு நீதிபதிகள் பொதுவாக சிவில் வழக்குகளில் கொடுக்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிக அளவில் தீர்ப்பு வழங்கியது இல்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டை அமர்வில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வராத பட்சத்தில் அவரின் அரசியல் எதிர்காலத்தில் பல குழப்பங்கள் ஏற்படும்.

கன்னி வெடி 2
வழக்கில் எடப்பாடி தோல்வி அடையும் பட்சத்தில், எடப்பாடிக்கு எதிராக அவரின் ஆதரவாளர்களே திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு ஆதரவாக இருந்த ஐயப்பன் போன்ற எம்எல்ஏக்கள் ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றுவிட்டனர். தீர்ப்பு எதிராக வந்தால் இன்னும் பலர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஓ பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்க்கும் சிவி சண்முகம், ஜெயக்குமார் போன்ற சிலர் மட்டுமே எடப்பாடி கேம்பில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜு போன்றவர்கள் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னி வெடி 3
அதிமுகவில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் கட்சி உடையும் வாய்ப்புகள் உள்ளன. தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எடப்பாடி நாங்கள்தான் அதிமுக என்று கூற வாய்ப்பு உள்ளது. அதோடு சின்னம் எங்களுத்தான் என்று அவர் கூற வாய்ப்பு உள்ளது. நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் எம்எல்ஏக்கள் ஆதரவை பெற வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவில் வரும் நாட்களில் கடும் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கன்னி வெடி 4
அதிமுகவில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் கண்டிப்பாக சசிகலா எழுச்சியை எதிர்பார்க்கலாம். சசிகலா , ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைவது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தீர்ப்பு வரும் பட்சத்தில் இதில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும். இப்போது ஓபிஎஸ் - டிடிவி - சசிகலா ஆகியோர் சந்திக்காமல் அமைதியாக இருப்பதே தீர்ப்பு வர வேண்டும் என்றுதான். தீர்ப்பு வந்ததும் இந்த சந்திப்புகள் நடக்கலாம்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications