இரவில் சற்று நேரம் முடங்கிய வாட்ஸ்அப்... தகவல்களைப் பரிமாற முடியாமல் தவித்துப்போன மக்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியதால், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் மக்கள் அவதி அடைந்தனர்.
சென்னை: வாட்ஸ் அப்பில்தான் பலரது வாழ்க்கையே நடக்கிறது. சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ் அப்பினால் பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் தவித்துப் போயினர்.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.

அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அதனை பயன்படுத்துவோர் தவித்தனர்.
வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.பின்னர், சேவையில் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், பிரச்னைகளை சீர் செய்துவிட்டதாகவும், இதுவரை பொறுமை காத்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டது.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் சாட்டிங் செய்ய முடியாமலும், வீடியோ கால் பேச முடியாமலும் பலரும் தவித்துப் போயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் செயலி பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications