தமிழ்நாட்டில் மறுபடியும் கிராம சபை கூட்டம்.. எல்லாருமே கலந்துக்கணும்.. கலெக்டர்களுக்கு திடீர் ஆர்டர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசியலில் கிராம சபை கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து வருகின்றன.. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம்.

அதிர்வலைகள் : இந்த கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும், எழுப்பப்படும் பல்வேறு விவகாரங்கள், அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்திவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
மக்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் சக்தி வாய்ந்த அமைப்பாக இந்த அரசியல் அமைப்பில் பார்க்கப்படுவது கிராம சபை என்பதால், இதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
கிராம சபை கூட்டம்: அந்த வகையில் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினமான 26 - ஜனவரி, தொழிலாளர் தினமான மே - 1, இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு - 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் - 2, உலக நீர் நாளான மார்ச் - 22 மற்றும் உள்ளாட்சி நாளான நவம்பர் - 1 ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது இந்த வருடத்துக்கான கிராம சபை கூட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டம்: அதில், "குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கேம் ஓவர்.. விஜய் போட்ட சிங்கப்பெண் ஸ்கெட்ச் பின்னணி! இனி நேரா முதல்வர் ஆபீஸ் லிங்க்.. சைபர் டீம் அதிரடி -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications