வாய் விட்ட செல்வப்பெருந்தகை.. அப்படியே அதிர்ந்த திமுக.. கதிகலங்கிய கமல் ஹாசன்.. காரணமே "ஜெய்" தானா?
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது, கூட்டணிக்காக அதிமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.. என்ன காரணம்?
கடந்த முறை தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைத்த முதல் கட்சியே காங்கிரஸ்தான்.. மொத்தம் 10 சீட்டுக்களை லட்டு போல அள்ளி தந்தது திமுக.. ஆனால், இந்த முறை இழுபறியில் உள்ளது கூட்டணி பேச்சுவார்த்தை.

திமுக: 15 தொகுதிகளில் போட்டியிட சீட் வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது காங்கிரஸ்.. ஆனால் திமுகவோ, டபுள் டிஜிட்டுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி, 5 அல்லது 6 சீட்களிலேயே விடாப்பிடியாக நிற்கிறது.. கூட்டணி பேச்சுவார்த்தை தடைபட்டு நிற்பதற்கு இதுவே காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது...
இப்படிப்பட்ட சூழலில்தான், சில நாட்களுக்கு முன்பு, "எங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது" என்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. திடீரென செல்வப்பெருந்தகை இப்படி சொல்லவும், திமுக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.. காங்கிரஸை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ந்து போய்விட்டன..
அதிமுக கூட்டணி: திமுகவுடன் நாங்கள் தோழமையுடன் இருக்கிறோம்.. நட்புடன் இருப்பதால் இந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வாய்ப்பு இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினாலும், அதிமுகவின் பெயரை, இந்த நேரத்தில் ஏன் இழுக்க வேண்டும்? என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.
செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை, தமிழக தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதால், எப்படியும் இரட்டை இலக்க சீட்களை பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறாராம்..
டெல்லி: முன்னாள் தலைவர் அழகிரி பொறுப்பிலிருந்தபோது, இதே சிங்கிள் டிஜிட் சீட்களை ஒதுக்க திமுக முடிவு செய்திருந்தது. அதனால்தான், தன்னுடைய தலைமையில் டபுள் டிஜிட் சீட் வாங்கிவிட்டால், டெல்லி மேலிடத்தில் நன்மதிப்பை பெற முடியும், கட்சிக்குள்ளும் நற்பெயரை பெற முடியும் என்று கணக்கு போடுகிறாராம்.
இதை மையப்படுத்தியே, கூட்டணி பேரத்தை உயர்த்துவதற்காக அதிமுக பெயரை உச்சரித்ததாக சொல்கிறார்கள்... ஆனால் இந்த விஷயத்தில் அதிமுகவின் ஜெயக்குமார் என்ட்ரி தந்துவிடவும், அது திமுகவுக்கு கூடுதல் எரிச்சலை தந்துவிட்டதாம்.
ஜெயக்குமார்: ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் தோன்றுகிறது. எங்களுக்கு பயந்தே திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. உடனே ஒப்பந்தம், உடனே கையெழுத்து போட்டு தொகுதி உடன்பாட்டை வெளியிடுகிறார்கள். அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் அவர்களை விட்டால் நேராக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்பதால்தான்" என்று கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை + அதிமுக என இரு தரப்புமே கூட்டணி பற்றி பேசியதால், திமுக மேலிடம் அதிருப்திக்கு ஆளாகிவிட்டதாம்.. இதுகுறித்த விஷயம், மேலிட காங்கிரசுக்கு பறந்துள்ள நிலையில், திமுகவுடன் தான் கூட்டணி, வேறு எது பற்றியும் சிந்திக்கவும் வேண்டாம், பேச வேண்டாம் என்று தமிழக காங்கிரசுக்கு அட்வைஸ் தரப்பட்டிருக்கிறது.
மீண்டும் விளக்கம்: இதையடுத்தே, செய்தியாளர்களுக்கு நேற்றைய தினம் மீண்டும் ஒருமுறை பேட்டி தந்திருந்தார் செல்வப்பெருந்தகை. அப்போது, "திமுகவுடன் கூட்டணி பேச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.. நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்கும். தமிழகத்தில் ராகுல் போட்டியிட விரும்புகிறேன். காங்கிரஸ் அதிமுக தரப்பில் எந்தவிதமான பேச்சும் நடத்தவில்லை.. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிலும் கையெழுத்தாகும். கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளர்களாக கருதி வேலை செய்வோம் என்று கூறியருந்தார்.
மேலிட தலைவர்கள்: செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறியதையடுத்து, திமுக தரப்பில் லேசாக அதிருப்தி நீங்கியிருக்கிறதாம்.. காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும், திமுக மேலிட தலைவர்களுடன் போன் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்... இது ஓரளவு சுமூகமான முடிவை தந்துள்ள நிலையில், தொகுதிகள் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. எப்படியும் இன்று அல்லது நாளைக்குள் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்












Click it and Unblock the Notifications