நிறம் மாறுதோ.. "பச்சைக்கிளி" டெல்லி பக்கம் பறந்துடுச்சே.. "கூல்" லீடருக்கு மேலிடத்தில் எகிறும் மவுசு
சென்னை: நாளுக்கு நாள் அமமுகவின் டிடிவி தினகரனின் செல்வாக்கும், அவர் மீதான நம்பிக்கையும் டெல்லியில் உயர்ந்து கொண்டே போகிறது என்கிறார்கள்.. இது சில முக்கிய தலைவர்களுக்கு காதில் புகைச்சலையும் உண்டுபண்ணி வருகிறதாம்.
தினகரனை பொறுத்தவரை, அதிமுகவில் தனக்கு மதிப்பு இல்லை என்பதால்தான் அமமுக என்ற கட்சியையே தனியாக ஆரம்பித்தார்.. ஆரம்பத்தில் தனக்கான செல்வாக்கை நிரூபித்த தினகரன், அடுத்தடுத்த தேர்தல்களில் சறுக்கல்களையே கண்டார்..
மேலும், அமமுகவின் முக்கிய தூணாக இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் எல்லாம் திமுக பக்கம் சென்றுவிட, பக்கபலமாக இருந்த மூத்த தலைவரான வெற்றிவேலும் இறந்துவிட கட்சி பலவீனமாக ஆரம்பித்தது..
கத்திரிக்காய் முத்திடுச்சே.. சான்ஸ் கிடைத்தும்.. அமமுக யாருடன் கூட்டணி.. டிடிவி தினகரனே சொல்லிட்டாரு

செல்வாக்கு
செல்வாக்கை இழந்த அமமுக மீது ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு பிடித்தம் இல்லை என்றார்கள்.. அதனால்தான், அமமுக என்ற வார்த்தையே இதுவரை சசிகலா வாயில் இருந்து உச்சரிக்கப்படவில்லை என தெரிகிறது.. அதுமட்டுமல்ல தினகரன் தனியாக கட்சி நடத்துவது சசிகலாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும், அந்த கட்சியை கலைத்து விட்டு, அதிமுக கொடியை பயன்படுத்துங்கள் என்று தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சசிகலா வலியுறுத்தியதாகவும்கூட கடந்த வருடம் செய்திகள் பரபரத்தன..

தினகரன்
இது தினகரனுக்கு பெருத்த அதிருப்தியையும் அப்போது தந்தது.. அமமுக என்ற பிரம்மாண்டமான ஒரு கட்சி இருக்கும்போது, எதற்காக சசிகலா, அதிமுக பின்னாடியே செல்ல வேண்டும்? அக்கட்சியில் இணைய முயற்சிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் அமமுகவின் அவைத் தலைவராக இருந்து, வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமே என்றும் தினகரன் யோசித்ததாக அரசியல் நோக்கர்கள் தங்கள் கருத்துக்களையும் அப்போது சொன்னார்கள்.. இதற்கு பிறகு, இன்னொரு புகைச்சலும் அமமுகவில் இருந்தே வெடித்தது..

சைலண்ட் கடிவாளம்
சில மாதங்களுக்கு முன்பு, சசிகலா வீட்டிற்கு, அமமுக மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சென்று, தங்கள் ஆதரவை சசிகலாவிடமும் தெரிவித்தார்கள் போலும்.. அதற்கு சசிகலா, "தைரியமா என்னுடன் வாங்க.. ஆனால், நான் வெளியில் செல்லும்போது, ஏன் அப்படி வர்றீங்க? அமமுக கொடியுடன் கொடியுடன் வராதீங்க.. அதிமுக கொடியுடன் வாங்க.. தினகரனும் கட்சியை கலைத்தால்தான் சரியா வரும்.. எல்லாரும் சேர்ந்து பணியாற்றினால்தான், நாம் நினைத்ததை சாதிக்க முடியும்" என்று நம்பிக்கை தந்து பேசினாராம்.

நமத்துப்போச்சே
இந்த விஷயமும் தெரிந்து தினகரனுக்கு, சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகிகள் மீது கடுப்பானதாகவும், சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் யாரும் பங்கேற்க கூடாது என வாய்மொழி கடிவாளம் போட்டதாகவும் சொன்னார்கள்.. இப்படி எத்தனையோ புகைச்சல்கள் தினகரன் - சசிகலா தரப்பில் இருந்து வந்தாலும், வெளிப்படையாக இவர்கள் சந்திப்பு நடந்ததில்லை.. தினகரனை பற்றி சசிகலாவும், சசிகலாவை பற்றி தினகரனும் எந்தவிதமான கருத்துக்களையும் பொதுவெளியில் பேசியதில்லை.. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் அரசியல் நமத்து போய்விட்டதாக கருதப்படுகிறது..

அணில் சப்போர்ட்
மேலிட கரிசனம் தன்மீது விழ வேண்டும் என்பதற்காக, ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு கேட்டு காய்நகர்த்தியும் அதன்மூலம் பெரிதாக எந்த பலனும் சசிகலாவுக்கு கிடைக்காமலேயே உள்ளது.. தவிரவும், அவர் எடுத்த சுற்றுப்பயணம் வியூகம் முதல் ஆடியோ ரிலீஸ்வரை அனைத்துவிதமான அரசியலும் தோல்வியை சந்தித்துவிட, மறுபடியும் டேக் ஆப் ஆகிவிட்டது டிடிவியின் அமமுக... எம்பி தேர்தல் விரைவில் நடக்க போகிறது.. குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக கங்கணம் கட்டிக் கொண்டிருக்க, "அணில்" போல பங்களிப்பு இருக்கும் என்ற தினகரனின் வார்த்தைகள், கூட்டணிக்கான அறிகுறியை பறைசாற்றும் விதமாகவே உள்ளது..

கூல் லீடர்
தினகரனின் முதிர்ச்சி அரசியல் மூலமும், வலுவான வாக்கு வங்கி மூலமும், மேலிட ஆதரவையும், நம்பிக்கையையும் அதிகமாகவே பெற்றுள்ளார் கூல் தலைவர் டிடிவி தினகரன். கடந்த முறை தேர்தலை எடுத்துக் கொண்டால், டிடிவி தினகரன் மட்டும் 25 தொகுதிகளில் வாக்குகளை பிரித்துள்ளதையும் பாஜக மேலிடம் கவனிக்காமல் இல்லை.. எனவே, ஓபிஎஸ், தினகரன் மூலம் தென்மண்டலங்களிலும் கால்பதிக்க, பாஜக முயற்சி எடுப்பதாகவும் தெரிகிறது.. எனவே, பாஜகவின் ஆதரவு டிடிவி தினகரனுக்கு எப்படி தேவையோ, அதுபோல, தினகரனின் வாக்கு வங்கியும் பாஜகவுக்கு தேவையாக இருக்கும் என்பதால்தான், கூட்டணி வாடை இப்போதே வீச துவங்கி விட்டது என்கிறார்கள்.. அதற்கேற்றபடி, பாஜகவின் குரலாகவே தினகரனின் குரலும் அவ்வப்போது தமிழகத்தில் ஒலித்து வருகிறது..

தடைக்கல்
சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவுடன் நேரடியாகவே தொடர்பில் இருக்கும் அளவுக்கு நம்பிக்கையை பெற்றுள்ளாராம் டிடிவி.. இதனால், சசிகலாவின் தயவு தேவையில்லை என்றும் முடிவெடுத்துவிட்டாராம்.. சசிகலாவுக்கு ஏற்கனவே மேலிடத்தின் கரிசனம் கிடைக்காத நிலையில், தினகரனின் நெருக்கமும், சசிகலாவின் அரசியலுக்கு இன்னொரு தடைக்கல்லாக உருவெடுத்துள்ளது என்கிறார்கள்.. எனினும், ஓபிஎஸ், தினகரன் கூட்டணிக்காக இணையும் பட்சத்தில், சசிகலாவை தவிர்த்துவிட முடியாது, அப்படி தவிர்த்துவிட்டும் தென்மண்டலங்களில் வாக்குகளை முழுமையாக பெற முடியாது என்கிறார்கள்..

மாறும் கலர்
சசிகலா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக, பெரிதாக வாய் திறக்கவில்லை.. ஆதரவும் தரவில்லை.. சசிகலாவை வைத்து கட்சிக்கு பெரிதாக லாபம் எதுவுமில்லை என்று பாஜக தரப்பு நினைப்பதாலும், தென்மண்டலங்களில் மட்டுமே செல்வாக்கு இருப்பவரை பொறுப்பில் அமர்த்தினால், அதிமுக பலவீனப்படுவதுடன், சாதி ரீதியான முத்திரை கட்சிக்கு அதிகமாக விழுந்து விடும் என்று கணக்கு போடுவதாலும், சசிகலாவை ஆதரிக்க தயங்குகிறதாம்.. அதனால்தான், தினகரன் மீது, பாஜகவின் குறி விழுந்ததாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கூலிங் டீல்
மற்றொருபுறம், அமமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வலையை விரித்துள்ளதாம்.. எவ்வளவு முட்டிமோதினாலும், தென்மண்டல சமூக மக்களின் ஆதரவை எடப்பாடி பெற முடியாத நிலையில், இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளாராம்.. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.. சமீபகாலமாகவே கட்சிக்கு எந்தவிதமான செலவையும் தினகரன் செய்வதில்லையாம். எந்த ஒரு கூட்டம் என்றாலும் நிர்வாகிகளையே முழு பொறுப்பையும் ஏற்க சொசால்லிவிட்டு, தாராளத்தை கண்ணிலேயே காட்டுவதில்லையாம்.

தூண்டில் மீன்
இதனால் பல அமமுக நிர்வாகிகள் கையை பிசைந்து நிற்க, இந்த தகவலை மோப்பம் பிடித்துவிட்டதாம் எடப்பாடி தரப்பு.. தென்மண்டலங்களில் உள்ள அமமுக அதிருப்தியாளர்களுக்கு வலையையும் விரித்துள்ளாராம்.. அத்தகைய நிர்வாகிகளிடம், தற்போதுள்ள பதவியையே அல்லது அந்த பதவிக்கு இணையான பதவியை தருவதாக சொல்லி நூல் விட்டுள்ளதாம் எடப்பாடி தரப்பு.. ஆனால், அதற்குள் இப்படி ஒரு விஷயம், தினகரன் காதுக்கும் சென்றுவிட்டதாம்.. ஏற்கனவே, அசால்ட்டாக இருந்துதான், அமமுகவின் பலம்வாய்ந்த் சிங்கங்களை இழந்துவிட்டோம்.. இனியாவது உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளாராம். இனி என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!