பஞ்சு பஞ்சா, பறக்கும் பாதிரியார் மானம்.. ஜெபம் பண்ண போன இடத்திலும் அத்துமீறல்.. விநோத "பாவமன்னிப்பு"
கன்னியாகுமரி பாதிரியார் கேரளாவில் இருக்கலாம் என்பதால், போலீசார் அங்கு விரைந்துள்ளனர்
சென்னை: தலைமறைவாக உள்ள குமரி பாதிரியார், கேரளாவில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.. மேலும், செல்போன் சிக்னல் வைத்து அவரை பிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சர்ச் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ.. 29 வயதாகிறது.. விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர், இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ மட்டுமின்றி பெண்களுடன் போட்டோக்கள் ஆபாச சாட்டிங் என பாதிரியாரின், அத்தனை விவகாரமும் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

ஆபாசம்
இந்த புகார்கள் அடுத்தடுத்து வந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார்... பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்... மேலும், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தான் பணி செய்யும் இடங்களில் எல்லாம் சர்ச்சுக்கு வரும் இளம்பெண்களிடம் சேட்டை செய்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள்..

ப்ளேபாய்
பிரார்த்தனையின்போது ஆறுதல் சொல்வது போல் தன் வலையில் வீழ்த்திவந்திருக்கிறார்.. யாரிடம் நெருங்கி பழகினாலும், அதை வீடியோவாக எடுத்து கொள்வாராம்.. அதேபோல, வாட்ஸ் அப் கால், செய்தாலும் அல்லது மெசேஜ் அனுப்பினாலும் அதையும் ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துவைத்துக்கொண்டு பாலியல் தொல்லை செய்து மிரட்டுவாராம்.. சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவரும் பிளேபாய் போல் அதைச் செய்துவந்ததாக சொல்கிறார்கள்.. இப்போதைக்கு 10-க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்மீதான புகார்கள் இனியும் அதிகமாகும் என்கிறார்கள்.

ஹார்ட்டிஸ்க்
அதேசமயம், இதுவரை வெளியாகி உள்ள வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆகியவைகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியும் துரிதமாக துவங்கி உள்ளதாம். இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் சொல்லப்படும்போது, பாதிரியாரிடம் இன்னொரு லேப்டாப் இருப்பதாக சொல்லப்படுகிறது... பாதிரியார் தலைமறைவாகியுள்ளதால் அந்த லேப்டாப்பை போலீசாரால் உடனடியாக கைப்பற்ற முடியவில்லை. பாதிரியார் கைது செய்யப்படும்போதுதான், அவரிடம் உள்ள செல்போன் ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்கிறார்கள்.

டபுள் தனிப்படை
ஒருவேளை அவரிடம் உள்ள மின்சாதனப் பொருட்களில் இருந்து வீடியோ, போட்டோக்கள் அளிக்கப்பட்டிருந்தால், தடயங்களை அழித்ததாக கூடுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் மீட்டெடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீஸார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.... சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஜெபம்
நேற்றைய தினம் அவர் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.. இப்போது கேரளா பகுதியிலும் அவர் பதுங்கி இருக்கலாம் என்பதால், தனிப்படையினர் அங்கும் ரகசியமாக சென்று கண்காணித்து வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் நம்பர் மற்றும் சிக்னல் மூலம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்... அதுமட்டுமல்ல, பாதிரியாரிடம் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னையை சேர்ந்த இளம்பெண்களும் ஏமாந்துள்ளனராம்.. சென்னையில் திருமண வீட்டிற்கு பிரார்த்தனை செய்யச்சென்ற இடத்தில், ஒரே நாளில் அங்கு ஒரு இளம்பெண்ணை பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ தன் வலையில் வீழ்த்தியுள்ளார்..

80+ வீடியோ
தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு, பாதிரியாரே திருமணம் செய்து வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்தபோது சுமார் 80-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான், பாதிரியார் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

தஞ்சம் + சரண்
பாதிரியாரால் பாதிக்கப்பட்டோர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.. இதனால், பல்வேறு இளம்பெண்கள் புகார்களை அதிகம் தர முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதையடுத்து பாதிரியாருக்கு நெருக்கடிகள் கூடிவருகிறது. இதனிடையே, தனிப்படை போலீசார் நெருங்கியதால், தலைமறைவாக உள்ள பாதிரியார் பெனடிக்ட் சரண் அடைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications