சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சல்லி சல்லியா உடையும் எடப்பாடி பிளான்.. பண்ருட்டியாருக்கு செம போஸ்டிங் ஏன் தெரியுமா.. என்னது பாஜகவா?

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புது பதவியை ஓபிஎஸ் வழங்க என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. மீண்டும் புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.. இரண்டும் ஒரே கட்சியில் நடந்துள்ளது.. இரண்டும் ஒரே நாளில் நடந்துள்ளது.. இந்த நீக்கமும் + பொறுப்பும் இருவேறு விவாதங்களை அரசியல் தளத்தில் உருவாக்கி வருகிறது.

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்!

நாடே இல்லாத 'ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்.. பந்தாடப்பட்ட பண்ருட்டி.. ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த ஜெயக்குமார்! நாடே இல்லாத 'ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்.. பந்தாடப்பட்ட பண்ருட்டி.. ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த ஜெயக்குமார்!

 பண்ருட்டி

பண்ருட்டி

எடப்பாடி தலைமையில் பொதுக்குழு நடந்ததற்கு முன்பும், பின்பும், பண்ருட்டியாரை தனியாக சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.. இதற்கு முன்பு, சசிகலாவும் பண்ருட்டியை சந்தித்து பேசியிருந்தார்.. இவர்கள் அனைவரிடமும் பண்ருட்டி சொல்லியிருந்த ஒரே கருத்து, அதிமுகவில் பிளவு கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.. அதாவது பாஜக மேலிடம் வலியுறுத்தி வரும் அதே கருத்தைதான், மூத்த தலைவரான பண்ருட்டியும் சொல்லி உள்ளார்.. சொல்லியும் வருகிறார்.

 பாஸிபிள்?

பாஸிபிள்?

பாஜக சொல்லியே கேட்காத எடப்பாடி, பண்ருட்டி சொல்லியா கேட்க போகிறது என்ற இயல்பான கேள்வி பரவலாக எழவே செய்துள்ளது.. அதனாலேயே பண்ருட்டியை கட்சியில் இருந்து நீக்கவும் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.. அப்படியானால் ஓபிஎஸ்ஸுக்கு பண்ருட்டியால் என்ன பலன் கிடைக்கும்? அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக ஒருவர் உள்ள நிலையில், பண்ருட்டி நியமனம் சாத்தியமா? ஓபிஎஸ்ஸையே கட்சியை விட்டு நீக்கியபிறகு, அவர் எப்படி இன்னொரு நபருக்கு பதவியை தர முடியும்? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

 நிறம் மாறும் தலைகள்

நிறம் மாறும் தலைகள்

ஆனால், ஓபிஎஸ் எதையுமே கணக்கு போட்டு செய்பவர் என்பதால், இந்த நியமனத்தின் பின்னணியில் நிறைய அரசியல் லாபம் இருக்கலாம் என்கிறார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மிக சிறந்த அரசியல் ஆசனாக இருந்தவர் பண்ருட்டி.. சட்டமன்ற தேர்தல் என்றாலே பண்ருட்டி தொகுதியில் ஜெயித்தவர் யார்? என்று கருணாநிதியே கேட்கும் அளவிற்கு எதிர்பார்ப்பை கிளறி விட்டனர்.. இவர் டெல்லி செல்கிறார் என்றாலே, தமிழக அரசியல் களமே கதிகலங்குமாம்.. அந்த அளவுக்கு சட்டநுணுக்கங்கள் முதல் அரசியல் அத்துப்படி தெரிந்தவர்தான் பண்ருட்டியார்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்


உங்களை போன்றோர் எங்களுடன் இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ்ஸே வேண்டி விரும்பி பலமுறை கேட்டுக் கொண்டு வந்தார்.. இன்றுதான் அதற்கான பொறுப்பையும் அதிகாரப்பூர்வமாக வழங்கி உள்ளார்.. பண்ருட்டி போன்றோர் உடனிருப்பதால் கட்சி மீண்டு வரும், தொண்டர்களிடம் ஒரு நம்பிக்கை ஏற்படும், சிக்கல்கள் தீரும் என்ற நம்பிக்கையில் பண்ருட்டி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 பவர்புல் போஸ்டிங்

பவர்புல் போஸ்டிங்

இன்னொரு காரணமும் உள்ளது.. பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களுக்கு முக்கிய பதவி தருவதன் மூலம், வன்னியர்களை சமாளிக்கவும், வன்னியர்களின் ஆதரவை பெற முடியும் என்றும் ஓபிஎஸ் டீம் நம்புகிறது.. ஆனால், ஒருகாலத்தில் அதிமுகவில் சக்தி படைத்தவராக இருந்த பண்ருட்டியால், இன்றைய சூழலில் அரசியல் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தாலும், ஒரு சமுதாய மக்களின் ஆதரவை இதன்மூலம் பெற முடியும் என்பதே ஓபிஎஸ் கணக்காக உள்ளது.

 புது டீம்

புது டீம்

இன்னொரு காரணமும் உள்ளது.. பண்ருட்டி நியமனத்தில் பாஜகவின் அரசியலும் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதாவது, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் இவர்களுடன் பண்ருட்டியார் இணையும் பட்சத்தில், புது டீம் உருவாக வாய்ப்புள்ளது.. இந்த டீமுடன் ரஜினிகாந்த் போன்ற பிரபலத்தை உள்ளே கொண்டு வந்து இணைக்கலாம் என்கிறார்கள்.. ரஜினி தலைமையில் ஒரு அணி தேர்தலை சந்திப்பது என்பது கடந்த 2 மாத காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்றாலும், அது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.. ரஜினியை கூட்டணிக்குள் கொண்டு வரும்பட்சத்தில், பண்ருட்டியாரின் ஆலோசனை பேரில் தேர்தலை சந்திக்க முயலலாம் என்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அதாவது, அன்று விஜயகாந்த்துக்கு பண்ருட்டி பக்கபலமாக இருந்ததுபோல, ரஜினிகாந்த்துக்கும் பண்ருட்டி அரசியல் ஆலோசகராக இருந்து வழிநடத்தினால், அதன்மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதே பாஜக கணக்காக உள்ளதாம்.. அதேபோல, பண்ருட்டி சொல்வதையும் ரஜினி நிச்சயம் மதித்து நடப்பார் என்பதால், இப்படி ஒரு வியூகத்தை பாஜக அமைத்திருக்கலாம் என்று கிளப்பி விட்டுள்ளனர்.. இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை என்றாலும், பண்ருட்டியாரின் அறிவும் + அனுபவமும் கட்சிக்கு கண்டிப்பாக வழிகாட்டும் என்கிறார்கள். காரணம், அன்று பண்ருட்டியார் இருந்தவரை தேமுதிக என்ற கட்சி கம்பீரமாக காட்சி தந்தது.. பண்ருட்டியாரை விலக்கியதுமே, அந்த கட்சி கரைந்து காணாமல் போய்விட்டது என்பது தமிழகம் அறிந்த உண்மை.. அந்தவகையில், பண்ருட்டியாருக்கு பொறுப்பு தரப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 ஸ்டிராங் நபர்

ஸ்டிராங் நபர்

எனவே, பண்ருட்டியார் போன்றோரை கட்சி இக்கட்டானா சூழலில் தவித்து கொண்டிருக்கும்போது, தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஒவ்வொரு நாளும் தவித்து கொண்டிருக்கும்போது, கழகத்தை வழி நடத்த பண்ருட்டியார் பொருத்தமான நபரை, பொருத்தமான சமயத்தில் ஓபிஎஸ் நியமித்துள்ளார் என்று என்று வாழ்த்துக்கள் ஒருபக்கம் குவிய தொடங்கி உள்ளது.. மற்றொருபக்கம், எடப்பாடி பழனிசாமி இப்படி கட்சியில் இருந்து எல்லாரையும் வெளியேற்றி கொண்டிருப்பது சரியல்ல, கடைசியில் அவர்மட்டும்தான் கட்சியில் மிஞ்சி நிற்க போகிறார்? சீனியர்கள் வழிகாட்டுதலும் தேவை என்று கருத்துக்கள் பதிவாகி வருகின்றன..

 ரஜினி?

ரஜினி?

இதற்கு நடுவில் "கட்சி இப்போது யாரிடம்தான் உள்ளது? யார்தான் எங்களுக்கு தலைவர்? இதற்கெல்லாம் காரணம் சரியான தெளிவான தீர்ப்பு வழங்காதது தான்.. என்று புலம்பல்களும் ஒலிக்க தொடங்கி உள்ளன.. இப்படி ஆதரவும், எதிர்ப்புமாக கருத்துக்கள் கிளம்பி உள்ள நிலையில், ஓபிஎஸ் பண்ருட்டியை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறார்? அல்லது பண்ருட்டி இந்த பதவியை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறார்? அல்லது பாஜகவின் பிளான் எந்த அளவுக்கு இதில் சக்ஸஸ் ஆக போகிறது? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

சாணக்கியன்

சாணக்கியன்

நேற்று முன்தினம், தமிழகத்தின் மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, பண்ருட்டியை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. "தலைமை தாங்குகிறவர்களுக்கு தாய்மை பண்பு இருக்க வேண்டும்" என்று பண்ருட்டி ராமச்சந்திரனே சொல்லிவிட்டார். பண்ருட்டி சாதாரண நபர் கிடையாது.. அரசியல் சாணக்கியன்.. அண்ணா பேசிய பேச்சை தமிழில் வெளியிட்டவர்.. எல்லாவற்றையும் அறிந்த ஒரு சித்தனாக காட்சி தருகிறார் பண்ருட்டி.. அவரை ஒரு கிளைக்கழக செயலாளராக சுருக்கி பார்ப்பது எடப்பாடி பழனிசாமியின் அறியாமையில் உளறல்.. எடப்பாடி பழனிசாமியை காலம் சும்மா விடாது.. நிச்சயம் காலமே அவரை கைவிட்டுவிடும்" என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

English summary
Where is the AIADMK internal conflict going and What is the reason for giving posting to Panruti Ramachandran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X