சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிக்கிடுச்சே".. பொறியில் மாட்டும் "புள்ளி".. திமுக ஆட்டம் ஆரம்பம்.. 3 பேரை தூக்க போகுதாமே.. நிஜமா?

கொடநாடு வழக்கு குறித்து 3 பேரிடம் விசாரணை நடத்த முடிவாகி உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவைகளை நொறுக்கக்கூடிய அளவுக்கு ஒரு முன்னெடுப்பை கையில் எடுக்க போகிறதாம்.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை வருடகாலத்தில், எடப்பாடி தரப்பு மீது திமுக அரசு சாஃப்ட் கார்னர் வைத்துள்ளதாக ஒரு சலசலப்பு எழுந்து வருகிறது.

அதிலும் ஓபிஎஸ் தரப்பில், மூத்த தலைவர் மருது அழகுராஜ் உட்பட பலரும் இந்த கேள்வியை விடாமல் கேட்டு வருகிறார்கள்.. "ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட், அருணா ஜெகதீசன் ஆணைய ரிப்போர்ட், என எடப்பாடி மீதான அதிருப்தி விவகாரங்கள் மாநில அரசுக்கு கையில் கிடைத்தும், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது?

புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை.. திமுக ஆட்சி உதயமாகும்..உறுதியாக சொன்ன மு.க.ஸ்டாலின்புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை.. திமுக ஆட்சி உதயமாகும்..உறுதியாக சொன்ன மு.க.ஸ்டாலின்

 கிழிந்த முகமூடி

கிழிந்த முகமூடி

பல மூத்த அதிமுக மாஜிக்களிடம் ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது? எடப்பாடியுடனான மறைமுக டீலிங் தான் காரணமா? அல்லது திமுக அரசின் மெத்தன போக்கா?, "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என்று எடப்பாடி தொடர்ந்து சொல்லி வருகிறாரா? அதற்கு திமுகவின் பதிலடி என்ன?... பிரச்சாரத்தில் ஸ்டாலின் என்ன சொன்னார்? கொடநாடு கொலைக்கு சூத்திரதாரி, குற்றவாளி எடப்பாடிதான்.. எங்களிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 நாளில் அவரது முகமூடியை கிழித்து, குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னார்களா இல்லையா?

கூமுட்டை

கூமுட்டை

ஒன்றரை வருடமாகிறது.. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய எடப்பாடியின் இடதும், வலதுமான சேலம் இளங்கோவனை இன்றுவரை விசாரிக்கவில்லையே ஏன்? ஸ்மார்ட் சிட்டியில் 2 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று செந்தில்பாலாஜி சொன்னாரே.. இப்போது அந்த பேச்சையே காணோமே ஏன்? திமுகவுடன் மறைமுக உறவு எடப்பாடிக்கு இருப்பதாக தெரிகிறது.. சுயநல வெறிபிடித்த மனநோயாளி எடப்பாடி.. முரண்பாடுகளின் மொத்த உருவம்.. அவரிடம் வீரம் இல்லை, ஈரம் இல்லை, தியாகம் இல்லை, அரவணைப்பு இல்லை, அறிவு இல்லை.. பொது அறிவும் இல்லை, பொதுவாகவே அறிவும் இல்லை, திராவிட இயக்கத்தின் கூமுட்டை தலைவன்" என்று கூறியிருந்தார்..

 ஷார்ப் விசாரணை

ஷார்ப் விசாரணை

மூத்த தலைவர் கேசி பழனிசாமியும், எடப்பாடிக்கு திமுகவுடன் மறைமுக உறவு இருப்பதாகவே சொல்லி வருகிறார்.. மற்றொருபுறம் அதிமுக முன்னாள்கள் மீதான விசாரணைகளை திமுக அரசு சீரியஸாக கையாள வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். வேலுமணி குறித்த தீர்ப்பு வெளியானபோது, ஒரு தனியார் டிவிக்கு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி தந்திருந்தார்.. அதில், "அதிமுக வழக்குகளில் திமுக அரசுக்கு மிகப்பெரிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. வேலுமணி மீதான வழக்குகளை, அரசு வழக்கறிஞர்களும், புலனாய்வுத்துறையும், மிகத்துல்லியமாக வாதாடி, வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது..

 மேட்ச் ஃபிக்ஸிங்

மேட்ச் ஃபிக்ஸிங்

ஒருவேளை இதை நிரூபிக்க தவறினால், பெரும்பணத்தை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுகவுடன் சமரசம் செய்து தப்பிவிடுகிறார்கள் என்று ஸ்டாலின் மீது, எடப்பாடி டீம் அல்லாத கட்சியினரின் விமர்சனங்கள் நிச்சயம் வெளிப்படும். அது ஸ்டாலினின் இமேஜை பாதிக்கக்கூடிய வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும்.. இதை செய்ய தவறினால், "மேட்ச் பிக்சிங்" என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக திமுக அரசு நேரிடும்" என்று ரவீந்திரன் துரைசாமி கூறியிருந்தார்.

 ஸ்கெட்ச்சஸ்

ஸ்கெட்ச்சஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.. எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரிடம் செக்யூரிட்டிகளாக இருந்த 3 போலீஸ் ஆபீசர்களை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இந்த 3 பேரில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர், இன்னொருவர் சேலம், மற்றொருவர் நெல்லையை சேர்ந்தவராம்.. இவர்கள் 3 பேருமே அந்த முக்கிய புள்ளியின் செக்யூரிட்டி பிரிவில்தான் தற்போதும் பணியில் உள்ளார்களாம்.. இவர்கள் 3 பேரின் செல்போன்களில் இருந்து, கோடநாடு கேஸில் சம்பந்தப்பட்டவர்களுடன் அந்த முக்கிய புள்ளி போனில் அடிக்கடி பேசியுள்ளாராம். அந்த ஆதாரங்கள்தான் தற்போது சிக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

 மேஜிக் நபர்

மேஜிக் நபர்

இவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்ய உள்ள நிலையில், அவர்களின் வாக்குமூலத்தை வைத்து, முக்கிய புள்ளியை வழக்கில் சேர்க்கவும் யோசித்து வருகிறார்களாம்.. அந்தவகையில், கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க போவதாக தெரிகிறது.. அந்த முக்கிய புள்ளி யார் என்பது தெரியவில்லை என்றாலும், இந்த வழக்கை திமுக அரசு துரிதப்படுத்தி வருவது, எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக திமுக மீது சொல்லப்படும் விமர்சனங்களை நொறுக்க காரணமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!!

English summary
Where is the Kodanadu case going and Are the 3 Police officers involved, says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X