Ramadoss Vs Anbumani: துண்டான மாம்பழம்? பாமக எம்எல்ஏக்கள் யார் யாருக்கு ஆதரவு? அன்புமணிதான் லீடிங்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் உள்ள 5 பாமக எம்எல்ஏக்களில் யார் யார் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை பாமக சந்தித்தது. இதில் 5 தொகுதிகளில் வென்றது. அந்த வகையில் மயிலம் தொகுதியில் சிவக்குமார், தருமபுரியில் வெங்கடேசன், மேட்டூரில் சதாசிவம், சேலம் மேற்கு தொகுதியில் அருள், பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி ஆகியோர் வென்றனர்.

anbumani pmk ramadoss

இந்த நிலையில் தந்தை ராமதாஸ்-மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக் குழு கூட்டத்தில் வெடித்தது. பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு தனது மகள் வழி பேரன் முகுந்தனை, ராமதாஸ் நியமித்ததால் அன்புமணி அந்த மேடையிலேயே தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அப்போது ராமதாஸ் மிகவும் காட்டமாக, இது என் கட்சி, விருப்பமில்லாதவர்கள் போகலாம் என கடிந்தார். இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமதாஸின் எதிர்ப்பை மீறி பாஜகவுடன் அன்புமணி கூட்டணி வைத்தார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு அவரை செயல் தலைவர் பதவிக்கு அமர்த்தினார். இது அன்புமணி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. மேலும் அன்புமணி தனது தாயை அடித்தவர், பொய் சொல்வதில் வல்லவர், அவரை மத்திய அமைச்சராக்கியது என் தவறு என்றெல்லாம் ராமதாஸ் கடுமையாக மனக்குமுறலை கொட்டியிருந்தார்.

இது போல் அன்புமணியின் இமேஜை பாதிக்கும் வகையில் ராமதாஸ் பேசியது எரியும் கொள்ளியில் எண்ணெய்யை எடுத்து ஊற்றியது போல் இருந்தது. இதையடுத்து சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் அன்புமணி தனது ஆதரவாளர்களை தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இவ்வாறு கூட்டம் நடத்தி கொண்டிருக்கும் போதே அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், அவர்களை மீண்டும் அன்புமணி நியமிப்பதுமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் 16 மாவட்டச் செயலாளர்களில் 15 பேர் கலந்து கொண்டனர். பனையூர் அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேசன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் சந்தித்து பேசியது ராமதாஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரும், அன்புமணியை சந்தித்தார்.

ஆக! மயிலம் சிவகுமார், தர்மபுரி வெங்கடேசன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர், அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். சேலம் மேற்கு அருள், பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+