அடுத்த வெடி.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி ‘அந்த 2 மாஜிக்கள் யார்?’ முன்னாள் ஐ.ஜிக்கு கேள்வி!
சென்னை : 2019ஆம் ஆண்டு ஐஜி பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகச் சொன்னாரே, அவர்கள் யார் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் 2019ஆம் ஆண்டு குற்றம்சாட்டிய 2 அமைச்சர்கள் யார் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றில், தீனதயாளன் என்பவரை தப்பிக்க வைப்பதற்காக பொன்.மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்கு போட்டதாக காதர் பாட்ஷா என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ பொன்.மாணிக்கவேல் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால், சமீபத்தில் ஊடகங்களில் கொந்தளித்துப் பேசியிருந்தார் பொன்.மாணிக்கவேல். இந்நிலையில், பொன் மாணிக்கவேல் அப்போது சொன்ன 2 அமைச்சர்கள் யார் என்று புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பை விடாமல் புரட்டி எடுத்து வரும் புகழேந்தி இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வா.புகழேந்தியை சமீபத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் ஓபிஎஸ். இந்நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 2 முன்னாள் அமைச்சர்கள் யார்? அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பங்கு இருக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலை கடத்தல்
புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொன்.மாணிக்கவேல் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர் என்பதால், காவல்துறையினர் பலருக்கே அவரைப் பிடிக்காது. சேலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்துக்காட்டியவர் பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அவர் நியமிக்கப்பட்ட பிறகு தான் நாடு விட்டு நாடு சிலைகள் கடத்தப்பட்ட பல விவகாரங்கள் வெளியே வந்தன. 2019 ஜூலையில் உயர் நீதிமன்றத்தில் அவரை மாற்றச் சொன்னது தமிழக அரசு, அப்போது உள்துறையை கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பொறுப்பு
அப்போதே ஐஜி பொன்.மாணிக்கவேலின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து, இரண்டு அமைச்சர்களுக்கு சிலை கடத்தலில் தொடர்பு இருக்கிறது எனத் தெரிவித்தார். அப்போது உள்துறைக்குப் பொறுப்பானவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அந்த 2 அமைச்சர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

தப்பிக்க வைக்க
இப்போது பொன்.மாணிக்கவேல் நடந்த கதைகளை எல்லாம் சொல்கிறார். கடவுள் சிலைகளை கடத்த முற்பட்டவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தந்ததாக பொன்.மாணிக்கவேல் சொல்கிறார். ஆனால், அவரை மாற்ற முயற்சித்தது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக, விசாரணை அதிகாரியை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.

2 அமைச்சர்கள் யார்
இப்போது நான் கேட்பதெல்லாம் அந்த 2 அமைச்சர்கள் யார்? தயவுசெய்து பொன்.மாணிக்கவேல் இப்போது அதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும். இதில் அரசியல் இல்லை. மக்கள் இதை அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். அந்த 2 அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமியும் இருந்தாரா என்ற சந்தேகப்படுகிறேன். அதை பொன்.மாணிக்கவேல் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

எடப்பாடிக்கு தொடர்பா?
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தளவுக்கு தொடர்பு உள்ளது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கோடநாடு கொள்ளை, கொள்ளை வழக்கு ஆகியவற்றில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டிருப்பது போல, இதிலும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? அந்த 2 அமைச்சர்கள் யார் யார்? என பொன்.மாணிக்கவேல் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications