29,108 போலீஸ் பணியிடங்கள்.. 5,000 பெண்களுக்கு தனி சான்ஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக காவல்துறையில் புதிதாக 29108 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக இந்த ஆண்டிலேயே 10,000 பேர் காவல்துறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 5000 பேர் பெண்கள் என்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. அப்படியானால் இந்த வேலைவாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழகத்தில் காவல்துறையில் வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கும், பெண் காவலர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் முக்கியமான அறிவிப்பு வெளியாகி விட்டது.

TVK

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, 29108 என்பது ஒரே நேரத்தில் நிரப்பப்படும் 29,108 வேலைகள் கிடையாது என்பதுதான். அடுத்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் தேவைக்கு ஏற்ப படிப்படியாக உருவாக்கப்பட்டு நிரப்பப்பட உள்ள கூடுதல் பணியிடங்களின் எண்ணிக்கையே இதுவாகும்.

போலீஸ் பணியிடங்கள்

அந்தவகையில் இந்த வருடம் 10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 5000 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதால், காவல்துறை பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைய உள்ளது... மீதமுள்ள பணியிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும், அந்தந்த ஆட்சேர்ப்பு விதிகளின்படி சான்ஸ் கிடைக்கும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வேலை தேடுபவர்கள் கவனிக்க வேண்டும். "29,108 போலீஸ் வேலை அறிவிக்கப்பட்டுவிட்டது, அதனால் அனைவரும் இப்போதே விண்ணப்பிக்கலாம்" என்பது இதன் அர்த்தமில்லை. எந்தெந்த பதவிகளுக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது தொடர்பான தனித்தனி ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியாக வேண்டும். அந்த அறிவிப்பில்தான் பதவியின் பெயர், கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரியவரும்.

தவெக அரசு அறிவிப்பு

அதாவது, இப்போது காவல்துறை வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த அறிவிப்பை ஒரு பெரிய எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்பாக பார்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு இந்த வருடத்திலேயே 5 ஆயிரம் இடங்கள் கிடைக்கப்போவதால், பெண் காவலர் பணிக்கு தயாராகி வருபவர்களுக்கு இது லட்டு போன்ற சான்ஸாகும்.

அதேசமயம், தமிழக காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறையும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது... அந்த பற்றாக்குறையை சரிசெய்வதுடன், போலீசாரின் செயல்பாட்டை நவீனப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காவல்துறை நவீனமயமாக்கலுக்காக ₹212 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பெண்களுக்கு வேலை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக "சிங்கப்பெண்" சிறப்பு காவல் படை அமைக்கப்பட உள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த Anti-Narcotics Task Force அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றங்களை விசாரிக்கும் பணியையும் நவீனப்படுத்தும் வகையில் சேலம் மற்றும் விழுப்புரத்தில் டிஎன்ஏ டெஸ்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திலும் நவீன Ballistic Identification System அமைக்கப்பட உள்ளது.

யார் யாருக்கு சான்ஸ்

பணியில் உயிரிழக்கும் போலீசாரின் குடும்பங்களுக்கான நிவாரண உதவியும் உயர்த்தப்பட்டுள்ளது. பணியில் உயிரிழக்கும் காவலர்களுக்கான உதவித்தொகை ₹20 லட்சத்தில் இருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. வீரமரணம் அடையும் காவலர்களின் குடும்பத்துக்கு ₹1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 29108 பணியிடங்கள் என்பது அடுத்த 5 வருடங்களுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு திட்டமாகம். இதில் இந்த வருஷமே 10000 பேர் நியமிக்கப்பட போகிறார்கள்.. குறிப்பாக 5,000 பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, தேர்வு எப்படி நடைபெறும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதுதான் முழுமையாகத் தெரியவரும்.

அதனால் போலீஸ் வேலைக்கு ரெடியாகும் இளைஞர்கள் இப்போதே தங்கள் கல்வி சான்றுகள், வயது உள்ளிட்ட தகுதிகளை சரிபார்த்து, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்புக்காக காத்திருப்பது முக்கியம் என்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+