சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100 % ஆர்எஸ்எஸ் "ப்ராடக்ட்".. ஆளுநர் ரவி + சனாதனம்.. என்னா பேச்சு இதெல்லாம்.. திருமாவளவன் போட்ட போடு

திருமாவளவன், ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் ரவி குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை : சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி கூறியிருந்த கருத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் அதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஆர்எஸ்எஸ்ஸை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

மாநில பிரச்சனைகளை கையாளுவது ஆளுநரா? முதல்வரா? மாநில ஆளுநரின் எல்லைகள் எதுவரை என்ற விவகாரம் தற்போதுதான் ஓய்ந்துள்ளது..

ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.. அதனால்தான் ஆளுநரை, "ஹெட் ஆஃப் தி ஸ்டேட்" என்கிறோம்..

யார்னு பாருங்க.. கும்பத்தை தலையில் சுமந்து.. ஏணியை பிடித்து ஏறிய திருமாவளவன்.. யார்னு பாருங்க.. கும்பத்தை தலையில் சுமந்து.. ஏணியை பிடித்து ஏறிய திருமாவளவன்..

 தேநீர் விருந்து

தேநீர் விருந்து

எனவேதான், பேரறிவாளன் விவகாரத்தில்கூட, இன்றைய ஆளுநரை கடிந்து கொண்டதுபோல், இதற்கு முன்பு சுப்ரீம்கோர்ட் வேறு எந்த ஆளுநரையும் நேரடியாக, பகிரங்கமாக, குற்றம்சாட்டியது இல்லை.. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் இன்று சொல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. நீட் விவகாரத்திலும் இப்படித்தான்.. ஆளுநரின் தேநீர் விருந்தை மாநில கட்சிகள் புறக்கணித்தாக வரலாறு இல்லை.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

இப்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன... ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்பதையும் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன.. இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விசிக குரல் எழுப்பியது.. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ஆளுநர் குறித்து விமர்சித்தும், எச்சரித்தும் திருமாவளவன் பேசியிருப்பது, அரசியல் களத்தில் அதிர்வை உண்டாக்கி வருகிறது.

பரமேஸ்வரா

பரமேஸ்வரா

இதற்கு காரணம், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பேசியிருந்த கருத்துதான் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது.. ஆளுநர் பேசும்போது, சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம்... மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் சொல்கிறது.. அதுவே கடவுள்.

 சனாதன தர்மம்

சனாதன தர்மம்

நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளது.. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.. ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை.. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் ஆகிறது... வேற்றுமையில் ஒற்றுமை என்பதைதான், நமது சனாதனமும் வலியுறுத்துகிறது என்று கூறியிருந்தார்.

 2 பேர் கைதாவார்களா?

2 பேர் கைதாவார்களா?

ஒருமாநில ஆளுநரின் இந்த பேச்சு, பரவலான அதிர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. இதற்குதான் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் குழந்தை தொழில் முறை ஒழிப்பு தினம் முன்னிட்டு மனித சங்கலி ஆர்ப்பாட்டத்தை திருமாவளவன் துவக்கி வைத்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, நபிகள் நாயகத்தை பற்றி தவறாக பேசிய நுபுல் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்தால் மட்டுமே போராட்டம் நடக்காது... அவர்கள் மத வெறுப்பு அரசியலை திணிக்கிறார்கள்..

Recommended Video

    அமித் ஷாவுக்கு என்ன கவலை? இந்து ஒட்டுதான் முக்கியம்.. ஒற்றுமை தேவை இல்லை - திருமா..!
    ப்ராடக்ட்

    ப்ராடக்ட்

    இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு எதிராக தான் மக்கள் போராடுகிறார்கள்.. சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.. ஆளுநர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் ப்ராடக்ட்... ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை அவர்.. ஆளுநர் பேசுவது இந்த தேசத்திற்கு நல்லதல்ல.. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் மீண்டும் எச்சரித்துள்ளார்.

    English summary
    Who does the governor work for and Why Thirumavalavan has criticized Ravi திருமாவளவன், ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் ரவி குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X