சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிற மதத்தினர் கோயிலுக்குள் வரகூடாதுனு சொல்ல எம்.ஆர்.காந்தி யார்? அமைச்சர் மனோ தங்கராஜ் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு
இல்லை என்று சான்றளிக்க எம்எல்ஏ காந்தி யார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளிமலை முருகன் கோயில் தேரோட்டத்தின் போது நடந்த பிரச்சினைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவிற்கு உரிமை இல்லை என தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்து கோயில்களில் உள்ள தேரின் வடம் பிடித்து இழுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆமா.. இவ்ளோ அமளி துமளி நடக்குதே.. ஓபிஎஸ்-இபிஎஸ் பேசிக்கிறாங்களா? ஆர் பி உதயகுமார் பதிலை பாருங்க ஆமா.. இவ்ளோ அமளி துமளி நடக்குதே.. ஓபிஎஸ்-இபிஎஸ் பேசிக்கிறாங்களா? ஆர் பி உதயகுமார் பதிலை பாருங்க

ஆனால் இந்து மதத்தை நம்பாதவர்கள், இந்து ஆலயங்களுக்கு செல்லாதவர்கள், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கவும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கவும் கூடாது. இதை ஏற்க முடியாது. மேலும் மாற்று மதத்தினர் இந்து கோயில்களின் விழாக்களில் தலைமையேற்பதை ஏற்க முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் எம்எல்ஏ காந்தி பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் யார்

இவர் யார்

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் , யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத் துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

பஞ்சாயத்து தலைவர்

பஞ்சாயத்து தலைவர்

1996-ம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோவில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன். குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் கோவில்களில் ₹50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா?

பிரிவினைவாதம்

பிரிவினைவாதம்


பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

மாற்று மதங்கள்

மாற்று மதங்கள்

மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மீகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர்.
பாஜகவினருக்கு ஆன்மீகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Minister Mano Thangaraj gives suitable reply to M.R.Gandhi who says non hindu should not lead any temple functions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X