பதவியேற்க அழைத்த சார்லஸ்.. வெள்ளையர்களுக்கே பிரதமரான இந்திய வம்சாவளி! யார் இந்த ரிஷி சுனக்?
பிரிட்டன் பிரதமராக பதவியேற்க மன்னர் சார்லஸால் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? அவரது அரசியல் அனுபவம் என்ன? என்பது குறித்து விரிவாக காண்போம்.
ரிஷி சுனக் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் யாஷ்விர் மற்றும் உஷா சுனக் இந்திய - ஆப்பிரிக்க பின்புலத்தை கொண்டவர்கள்.
கென்யா நாட்டில் பிறந்த இவரது தந்தை யாஷ்விரின் பின்புலம் ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தது. ரிஷி சுனக்கின் தந்தை வழி மூதாதையர்கள் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ளது.

கென்யா டூ பிரிட்டன்
1960 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது அப்பகுதி டான்சானியா எல்லையின் கீழ் வருகிறது. அதன் பின்னர் பிரிட்டன் சென்ற அவரது தந்தை யாஷ்விர் சுனக் தேசிய சுகாதார மையத்தில் பணிபுரிந்தவர். அவரது தாய் உஷா சுனக் மருந்தகம் நடத்தி வந்தார். 42 வயதான ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர்.

கல்வி
தன்னுடைய பெற்றோர் ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணிப்போடு உதவுவதை பார்த்தே தான் வளர்ந்ததாக தன்னுடைய இணையதள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் ரிஷி சுனக். உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மை கல்வியை பயின்றார்.

பணி அனுபவம்
2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய அவர், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தி வந்த கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

குடும்பம்
கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைதான் ரிஷி சுனக் திருமணம் செய்து இருக்கிறார். "சர்வதேச அளவில் படிக்க, பணியாற்ற வாழ வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் என் மனைவி அக்ஷதாவை கலிஃபோர்னியாவில் சந்தித்தேன். எங்களுக்கு கிருஷ்ணா, அனோஸ்கா என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் என்னை மகிழ்ச்சியோடும், பரபரப்போடும் வைத்துள்ளார்கள்." என்று குடும்பம் குறித்து தெரிவித்து இருந்தார் சுனக்.

அரசியல் தொடக்கம்
தன்னுடைய ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை செய்கிறார் ரிஷி சுனக். அரசியலுக்கு நுழைந்த பிறகு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார் ரிஷி. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் ரிஷி சுனக் இதே தொகுதியில் எம்பியாக தேர்வானார்.

கிடுகிடு வளர்ச்சி
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் உள்ளாட்சி அரசியல்துறை அமைச்சராக பதவியேற்ற ரிஷி சுனக், 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் கருவூலத்தின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை பதவிவகித்தார். வீழ்ச்சியில் உள்ள பிரிட்டன் பொருளாதாரத்தை ரிஷி சுனக் பிரதமராகி மீட்பார் என்று நம்புகிறார்கள் அந்நாட்டு மக்கள்.

ரிஷி சுனக்கிற்கு பெருமை
இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவியேற்பது இந்திய மக்களை மகிழ்ச்சியடைந்த செய்து இருக்கிறது. இதன் மூலம் பிரிட்டனின் பிரதமாராகும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் பிரிட்டன் - ஆசியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷி சுனக்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications