சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருப்பு ஆடு".. அடடா.. மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்த விஜயபாஸ்கர்.. ஆக்‌ஷன் ஆரம்பம்

விஜயபாஸ்கர் மீது திமுக மேலிடம் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இன்னொரு புகாரில் சிக்க போகிறாராம் மாஜி அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்.. அப்படி ஒரு யூகமான தகவல் இணையத்தை சுற்றி கொண்டிருக்கிறது..!

கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களின்போது, ஊழல் புரிந்த அதிமுக மாஜிக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக ஸ்டாலின் உறுதி கூறியிருந்தார்..

தேர்தல் வாக்குறுதிகளில் இந்த கைது நடவடிக்கையானது மிகப்பெரிய அளவுக்கு அப்போது பேசுபொருளானது.. திமுக ஆட்சி அமைந்ததும் கைது செய்வோம் என்று ஸ்டாலின் சொல்லவில்லை, மாறாக, உரிய விசாரணை நடத்தி, மக்கள் முன்பு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு பிறகு குற்றச்சாட்டுகள் உறுதியானதும், கைது செய்வோம் என்று சட்டரீதியாகவே குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியிருந்தார்.

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை- 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை- 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

மெத்தனம்

மெத்தனம்

ஆனால், அன்று ஸ்டாலின் பேசியது, இன்று திமுக அரசு மீதான விமர்சனங்களாக எழுந்துள்ளன.. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும் ஏன் இதுவரை, ஊழல் மாஜிக்களை கைதுசெய்யவில்லை? எதற்காக ரெய்டு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.. இதெல்லாம் ஒரு கண்துடைப்பா? திமுகவின் காலதாமதத்துக்கு காரணம் என்ன? உள்நோக்க அரசியல் உள்ளதா? லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக உள்ளதே? என்றெல்லாம் விமர்சனங்கள் பாய ஆரம்பித்துள்ளன.. இந்த விமர்சனங்கள் முதல்வர் ஸ்டாலினின் காதுக்கும் கொண்டு போகப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

எனினும், இந்த விஷயத்தில் அவசரப்படாமல் பொறுமை காக்க வேண்டும் என்று மேலிடம் நினைக்கிறதாம்.. சட்டப்படியாக இந்த விஷயத்தில் நீதிமன்றே கைது ஆர்டரை தர வேண்டும் என்றும், அதுவரை எந்தவகையிலும் குற்றம் புரிந்தவர்கள் தப்பிக்கவே முடியாத வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், சில தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.. அதாவது, சில தினங்களுக்கு முன்பு, விஜயபாஸ்கரின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர்..

கேஷூவல்

கேஷூவல்

அப்போது, இந்த ரெய்டு குறித்து பதற்றமே இல்லாமல் விஜயபாஸ்கர் காணப்பட்டதாக கூறப்பட்டது.. அதற்கேற்றபடி, செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போதும் கேஷூவலாகத்தான் விஜயபாஸ்கர் பேசினார்.. "என் வீட்டில் எதுவுமே ரெய்டில் சிக்கவில்லை.. அடுத்த ரெய்டுக்கு எப்ப வர்ற போறீங்கன்னு என் பொண்ணு கேட்கிறாள். அந்தளவுக்கு நாங்கள் எல்லாவற்றுக்கு தயாராகத்தான் இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.. இதற்கெல்லாம் காரணம், ஆளும் தரப்பில் இருந்து ஒருசிலர், ரெய்டு குறித்து முன்கூட்டியே அளித்த தகவல்தான் என்கிறார்கள்..

 ஓவர் ஓவர்

ஓவர் ஓவர்

2 நாட்களுக்கு முன்பேயே ரெய்டு வரும் விஜயபாஸ்கருக்கு போய்விட்டதாம்.. அப்போதே உஷாராகிவிட்டு, கொஞ்சநஞ்சமிருந்த டாக்குமெண்ட்களையும் ரகசிய இடத்துக்கு மாற்றிவிட்டாராம்.. இந்த விஷயம் திமுக தலைமைக்கு சென்று, கடும் கோபத்தை உண்டுபண்ணியிருக்கிறதாம்.. யார் அந்த கருப்பு ஆடு என்றும் மறைமுக உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.. இந்த ரெய்டு நடந்த 2 நாளிலேயே அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆளும் கட்சியை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக விமர்சித்திருந்தார் விஜயபாஸ்கர்..

 வான்டட் பேச்சு

வான்டட் பேச்சு

முதல்வர் ஸ்டாலினை ஏக வசனத்தில் பேசியதை கேட்டு, அதிமுகவினரே சற்று அதிர்ந்தனர்.. விஜயபாஸ்கர் பேசிய வீடியோவும் திமுக மேலிடத்துக்கு பறந்துள்ளதாம்.. அதனால், கொரோனா காலத்தில் நடந்த மருந்து கொள்முதல் விவகாரங்களை தூசுதட்டி எடுக்க போகிறதாம் மேலிடம்.. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி திண்டாடி கொண்டிருக்கிறது.. இவ்வளவு வழக்குகளை தன்மீது வைத்து கொண்டு, சற்று ஓவராகவே பேசி விஜயபாஸ்கர் வான்டட்டாக வந்து இன்னொரு வலையில் சிக்கி கொண்டுவிட்டாரோ என்று முணுமுணுக்கிறார்கள் புதுக்கோட்டை அதிமுகவினர்..!

English summary
Who is the black sheep and Why is DMK angry with AIADMK Ex Minister Vijayabaskar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X