கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு கடந்த மாதம் பொதுவெளியில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த மனு, எப்படி பொதுவெளிக்கு வந்தது? இதை கசிய விட்டது யார்? என்ற கேள்விதான் வலுத்தபடியே உள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாகவே விஜய் - சங்கீதா விவகாரம் தமிழகத்தில் மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பொதுவாக குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மிகவும் ரகசியமாக பராமரிக்கப்படும்.. சட்ட விதிகளின்படி, இணையதளத்தில் கூட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரின் பெயர்கள் மறைக்கப்பட்டு, விவரங்கள் கசிந்துவிடாதபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்..

விஜய் - சங்கீதா விவாகரத்து
இத்தகைய சூழலில், சங்கீதாவின் முழுமையான மனு குறிப்பிட்ட சில தேதிகளில் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியானது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது..
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர, தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் கடந்த 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்..
இந்த மனு உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சந்திரசேகரன் விரிவான பதிலை அளித்துள்ளார்..
ஆர்டிஐ பதில்
அந்த பதிலில், இந்த மனு பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..
குறிப்பாக, மனுதாரர் தரப்பில் இந்த விவகாரத்தை 'இன் கேமரா' (In-camera proceeding) முறையில் நடத்தக் கோரியும், ரகசியமாக இருக்க வேண்டிய மனு கசிந்துள்ளது.. இது குறித்து மனுதாரர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இதுவரை அவர்கள் தரப்பில் நடவடிக்கை கோரி எந்தப் புகாரும் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி பதில் அளித்துள்ளார்..
மேலும், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து (Suo Motu) வழக்கு ஏதேனும் பதிவு செய்துள்ளதா என்ற வினாவிற்கு, அவ்வாறு எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
செங்கல்பட்டு கோர்ட்
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய திருப்பமாக, கசிந்த மனுவில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை எதுவும் இடம் பெறவில்லை.. பொதுவாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஒரு ஆவணம் கசிந்திருந்தால், அதில் நீதிமன்ற முத்திரை கண்டிப்பாக இருந்திருக்கும்.. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆவணத்தில் அத்தகைய அடையாளம் ஏதும் இல்லாததால், இது நீதிமன்றத்திலிருந்து வெளியேறவில்லை என்பது உறுதியாகிறது..
வேறு யாராவது இந்த மனுவை வெளியிட்டிருந்தால் அது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்.. அவ்வாறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட தரப்பு உடனடியாகப் புகார் அளித்திருக்க வேண்டும்..
ஆனால், மனுதாரர் தரப்பு இதுவரை எந்தப் புகாரும் அளிக்காததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் ஆதித்ய சோழன், இந்த மனு சங்கீதா தரப்பில் இருந்துதான் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார்.. சட்ட ரீதியான இந்தத் தகவல்கள் இப்போது சோஷியல் மீடியாவில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பி வருகின்றன..!!
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி











Click it and Unblock the Notifications