Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜார்ஜ்" ஞாபகம் இருக்கா.. அவரை காணோமாமே.. வலை வீசிய சிபிஐ.. கசிந்தது சீக்ரெட்.. அப்ப குட்கா விசாரணை?

குட்கா வழக்கில் ஜார்ஜ்ஜிடம் சிபிஐ விசாரணை நடத்தப்படுமா என தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்கா வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி வரும் நிலையில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஜார்ஜ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பொதுவாக முந்தைய ஆட்சி கால ஊழலை, ஆளும் தரப்பு விமர்சிப்பதும், அது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதும் வழக்கம்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சி வித்தியாசமானது.. ஆட்சியில் இருக்கும்போது, அதுவும் அமைச்சராக பொறுப்பில் இருந்தபோதே, ஊழல் விவகாரத்தில் சிக்கி, பாஜக, அதிமுகவுக்கே ஷாக் தந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

 முடக்கம்

முடக்கம்

கடந்த 2016ம் ஆண்டில் சென்னையில் செங்குன்றம் அருகே இருந்த குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடர்ந்தது... மேலும் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களும் முடக்கப்பட்டன.. மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது...

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இந்நிலையில் மாநில அரசிடம் அனுமதி பெற்றே வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் இந்த விவகாரத்தில், விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் டி.ராஜேந்திரன் ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது.. குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய மாஜி அமைச்சர்கள் மற்றும் ஐபிஎஸ். அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தமிழக அரசு அண்மையில் அனுமதியை தந்திருக்கிறது..

 ஜார்ஜ் எங்கே?

ஜார்ஜ் எங்கே?

அந்தவகையில், எப்போது வேண்டுமானாலும் இவர்கள் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம், குற்றம்சாட்டப்பட்ட 9 நபர்களுக்கு அனுமதி தந்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டி.கே. ராஜேந்திரன் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதியை பெற்றுக்கொள்ளவும் என்றும் சிபிஐக்கு தெரிவித்திருக்கிறது திமுக அரசு...

 ஜார்ஜ் மிஸ்ஸிங்

ஜார்ஜ் மிஸ்ஸிங்

இந்த சூழலில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட் போட்டு அனுப்பியுள்ளதாம் சிபிஐ. அங்கிருந்து அனுமதி கிடைத்ததுடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. எனவே, சிபிஐ தரப்பில் அவர் எங்கே இருக்கிறார் என்று ஆலோசிக்கப்பட்டபோது, பணியிலிருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே அவர் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டிலாகி விட்டார் என்று தகவலை பெற்றுள்ளனர்.

 மாயம் - ஜார்ஜ்

மாயம் - ஜார்ஜ்

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்து அதன்பேரில் ஜார்ஜுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அவர் இந்தியாவுக்கு வருவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஐபிஎஸ் அதிகாரிகள்... ஜார்ஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி தருமா என்பதுதான் இப்போதைய முதல் கேள்வியாக உள்ளது.. அப்படியே அனுமதி தந்தாலும், ஜார்ஜிடம், விசாரணை நடத்துவதில் நடைமுறை சிக்கலும் எழுந்துள்ளதால், குட்கா விவகாரம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்துவிட்டது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+