யாரிந்த திரிஷா கிருஷ்ணன்? பலருக்கும் தெரியாத வாழ்க்கை பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதை தொடர்ந்து.. சமூக வலைத்தளங்களிலும் இணைய தேடல்களிலும் திரிஷா எனும் பெயர் மீண்டும் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

அரசியல் மற்றும் ஊடக விவாதங்களில் நடிகை திரிஷா கிருஷ்ணனின் பெயர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக இணையதளங்களில் அவரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்துள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் திரிஷா கிருஷ்ணனின் வாழ்க்கை பின்னணி மற்றும் திரை வாழ்க்கை பற்றிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் கல்விப் பின்னணி

திரிஷா கிருஷ்ணன் மே 4, 1983 அன்று சென்னையில் பாலக்காட்டு அய்யர் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை எத்திராஜ் கல்லூரியிலும் முடித்தார். வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்ற இவர், தொடக்கத்தில் குற்றவியல் உளவியல் சார்ந்த துறையில் மேல்டிப்பு படிக்கத் திட்டமிட்டிருந்தார்.

விளம்பரத் துறை மற்றும் திரைப்பட அறிமுகம்

கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்ட திரிஷா, 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் மெட்ராஸ் அழகுப்போட்டியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சில விளம்பரப் படங்களில் நடித்தார்.

Who is Trisha Krishnan ActressTrending Amid Tamil Nadu Political Controversy

திரைப்படத் துறையைப் பொறுத்தவரை, 1999-ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் ஒரு சிறிய துணை வேடத்தில் முதன்முதலாகத் திரையில் தோன்றினார். அதன்பின், இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். லேசா லேசா முதலில் நடித்த படம் என்றாலும் முதலில் ரிலீஸ் ஆகவில்லை.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம்

2000-களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்த திரிஷா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் திரைப்படங்கள்: விக்ரமுடன் 'சாமி' (2003), விஜய்யுடன் 'கில்லி' (2004) மற்றும் 'திருப்பாச்சி' (2005), அஜித்துடன் 'கிரீடம்' (2007) மற்றும் 'மங்காத்தா' (2011) உள்ளிட்ட பல வணிகரீதியான வெற்றிப் படங்களில் நடித்தார்.

தெலுங்கு திரைப்படங்கள்: தெலுங்கில் 'வர்ஷம்' (2004) போன்ற திரைப்படங்கள் மூலம் அம்மாநிலத்திலும் பரவலாக அறியப்பட்டார்.

2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த '96' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' (பாகம் 1 & 2) வரலாற்றுப் திரைப்படத்தில் 'குந்தவை' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

திரைப்படத் துறையைத் தாண்டி, 2017-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் குழந்தை உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பணிகளில் பங்கேற்றார். மேலும், விலங்குகள் நல அமைப்பான பீட்டா உடனும் இணைந்து தெரு நாய்கள் பாதுகாப்பு மற்றும் தத்தெடுப்பு சார்ந்த விழிப்புணர்வுகளில் ஈடுபட்டார்.

தற்போது 40 வயதைக் கடந்துள்ள திரிஷா, தென்னிந்திய மொழிகளில் தயாராகும் புதிய திரைப்படத் திட்டங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+