பொன்னியின் செல்வன் கிளப்பிய சர்ச்சை! வந்து விழும் பரபர கருத்துகள்.. யார் இந்த இராஜராஜ சோழன்!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ள நிலையில், யார் அந்த ராஜராஜ சோழன் என்பது குறித்து பார்க்கலாம்.
சோழர்கள் குறித்து 1950களில் தொடர்கதையாக வெளியான வரலாற்றுப் புனைவு தான் பொன்னியின் செல்வன். அதன் பின்னர் 5 பாகங்களாக இது புத்தகமாக வெளியானது.
இதைத் திரைப்படமாக்கும் முயற்சியில் எம்ஜிஆர் தொடங்கி பல்வேறு கலைஞர்களும் முயன்றனர். இறுதியில் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன்
விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தத் திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இத்திரைப்படம் தியைரங்குகளை தாண்டியும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் எனப்படும் ராஜராஜன் குறித்தும் சோழர்கள் குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இப்படி பெரிய விவாதத்தைக் கிளப்பிய அந்த ராஜராஜன் யார்? வாருங்கள் பார்க்கலாம்.

ராஜ ராஜ சோழன்
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றாகச் சோழர்கள் பார்க்கப்படுகிறார்கள். 9, 10ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்த அவர்கள், அதன் பின்னர் தங்கள் நிலங்களை இழக்கத் தொடங்கினர். சோழ வம்சத்தில் மிகவும் முக்கியமான மன்னர் ராஜ ராஜ சோழன். மிகச் சிறந்த போர் வீரனான இவர், பாண்டிய மற்றும் சேர நாடுகளில் பல பகுதிகளைக் கைப்பற்றினார். வடக்கு இலங்கை, லட்சத்தீவு, மாலத்தீவில் ஷவியானி அட்டோல் உள்ளிட்ட பகுதிகளிலும் கூட அவர் புலி கொடியை நாட்டினார்.

புனைவு கதை
அவரது வலிமையான படை வீரர்கள் கேரளா, கர்நாடகாவில் பல பகுதிகளையும் சோழ ஆட்சி பரவ உதவியது. அவரது மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலர் தான் பதவிக்கு வந்து இருக்க வேண்டும். இருப்பினும், அவர் மர்மமான முறையில் உயிரிழந்துவிடவே ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வருகிறார். இந்த மரணத்தை அடிப்படையாக வைத்தே பொன்னியின் செல்வன் என்ற புனைவு கதை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுயாட்சி முறை
பேரரசாக திகழ்ந்த இராஜராஜன் தனது சோழ தேசத்தை வளநாடு என்று சிறு பகுதிகளாகப் பிரித்து அப்போதே உள்ளாட்சி முறையை அறிமுகப்படுத்தியதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவரது நாடு முழுக்க ஏற்படுத்தப்பட்டு அந்த அமைப்புகளுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு முன்னோடி திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

தஞ்சை கோயில்
திராவிட கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் ராஜராஜன் ஆட்சியில் கட்டப்பட்டது தான். தமிழகத்தின் முக்கிய கோயிலான இது சமீபத்தில் தான் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமின்றி ராஜராஜன் தனது காலத்தில் பல்வேறு சிவ ஆலயங்களைச் சோழ நாடு முழுக்க ஏற்படுத்தி உள்ளார்.

வெற்றிமாறன்
இப்படி சோழ வரலாற்றில் முக்கிய மன்னராகத் திகழ்ந்த ராஜ ராஜன் பற்றி இப்போது விவாதத்தைக் கிளப்பி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று கூறி இதைத் தொடங்கி வைத்தார்.

பதில் கருத்துகள்
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு குரல்கள் எழத் தொடங்கியது. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், "அப்போது வைணவம், சிவம் மற்றும் சமணம் தான் இருந்தது.. இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஆங்கிலேயர்கள்தான் இந்து என்று அழைக்கத் தொடங்கினர்" என்றார். அதேபோல எதிர்ப்பும் கடுமையாகவே இருந்தது. ஹெச் ராஜா தனது ட்விட்டரில், " "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்" என்று கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.

சைவன். வைணவம்
அதேபோல தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் இது தொடர்பாகக் கருத்து கூறி இருந்தார். அவர் "தமிழகத்தில் இந்து கலாசார அடையாளத்தை மறைக்க முயற்சிகள் நடக்கிறது.. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார். மேலும், சைவம் மற்றும் வைணவம் இரண்டும் இந்துக்களின் அடையாளங்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த விவாதம் தான் சில நாட்களாகவே இணையத்தையும் ஆக்கிரமித்து உள்ளது. அதேநேரம் ராஜ ராஜ சோழன் போன்ற ஒரு மாபெரும் மன்னருக்கு மத சாயம் பூச வேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாம் படிக்கும் வரலாற்றில் 100% நடந்தது மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது என்றும் காலப்போக்கில் அதில் புனைவுகளும் சேர்ந்து இருக்கும் என்பதால் இதுபோன்ற விஷயங்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications