"விடமாட்டேன்".. கர்ஜித்த ஸ்டாலின்.. வசமாக சிக்கும் "தாமரை".. ஆட்டம் காணும் மேலிடம்.. யார் அது?
அதிமுகவில் அடுத்ததாக ஊழல் புகாரில் சிக்கும் நபர் குறித்த தகவல் வட்டமடிக்கிறது
சென்னை: அதிமுக கூடாரமே பரபரத்து காணப்பட, அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறதாம் திமுக.. இதனால், அரசியல் களம் மேலும் அனல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக ஆட்சி அமைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ஊழல் விபரங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின்போது உறுதியளித்தார்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிபோல் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை துவக்கினர்.

விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.. அந்த சோதனைகளில், கணக்கில் வராத கோடிக்கணக்கில் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது... அதாவது, இதுவரை 6 மாஜிக்களிடம் சோதனை நடந்து முடிந்துள்ளது..

அமைச்சரவை
இந்த 6 பேரும், மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது நடந்து முடிந்த ரெயிடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாம். இன்னும் மாஜி அமைச்சர் காமராஜ் கணக்கு இதில் சேரவில்லை. இந்த 7 பேருமே அமைச்சரவை வரிசையில் பிரதான இடத்தை பிடித்தவர்கள்.. ராஜேந்திரபாலாஜி மீது தனி கேஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.. ஆனால், ஆவின் முறைகேடு விரைவில் விஸ்வரூபமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அதற்கான, சரியான ஆதாரங்களை சேகரிக்கும் வேலையும் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் மும்முரமாகி உள்ளனர்..

2 பேர் யார்?
அதேபோல, இதில், டாப்பில் உள்ள 2 பேரிடம் மட்டும், திமுக இன்னும் நேரடியாக நெருங்கவில்லை.. ஆனால், அவர்களுக்கு பதிலாக, அவர்களின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், "வலதுகரங்களை, டார்கெட் செய்து வருகிறது.. காமராஜ் வீட்டில் ரெய்டு நடந்த பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த நபர் யார் என்ற தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.. தாமரையின் பெயர் கொண்ட அந்த நபரின் பெயர்தான் களத்தில் வட்டமடிக்கிறது. கட்சியில் சீனியர் என்பதுடன், எம்எல்ஏவாகவும், கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இவர் இருந்துள்ளாராம்.

தாமரை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் சென்றுள்ளதாம்.. அதேபோல, வருமானத்துக்கு அதிகமாகவும் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக இவர் மீது புகார் வந்துள்ளதாம்.. அதனால், எந்நேரமும் இது தொடர்பான ரெய்டு நடக்கலாம் என்கிறார்கள்.. இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. கடந்த 2020ல் தொற்று காரணமாக உயிரிழந்த அதிமுக மாஜி ஒருவர், பல கோடி ரூபாயை இவரிடம்தான் கொடுத்து வைத்திருந்தாராம்..
Recommended Video

விடமாட்டேன்
அந்த பணம் என்ன ஆனது என்றும் தெரியாததால், அதுகுறித்தும் விசாரணை நடக்கலாம் என்கிறார்கள்.. அதிமுகவின் மேலிடமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், மாஜிக்களின் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை.. அதேசமயம், ஊழல் புரிந்தவர்களை ஒருத்தரையும் விடமாட்டேன் என்று தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரங்களிலும் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி நிறைவேறி வருவதாகவும் தெரிகிறது.. பார்ப்போம்..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications